தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ இளம்பெண் மர்ம சாவு வருங்கால கணவர் கைது

 இளம்பெண் மர்ம சாவு வருங்கால கணவர் கைது

 இளம்பெண் மர்ம சாவு வருங்கால கணவர் கைது


ADDED : ஜன 23, 2026 06:01 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 23, 2026 06:01 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

தார்வாட்: தார்வாடில் இளம் பெண் கொலை வழக்கில், அவரை திருமணம் செய்யவிருந்த இளைஞரே அவரை கழுத்தை நெரித்து கொலை செய்தது தெரியவந்தது.

தார்வாட் மாவட்டத்தை சேர்ந்தவர் ஜாகியா முல்லா, 21. பாரா மருத்துவம் படித்த இவர், வேலை தேடி வருகிறார். இவரும், சபீர் முல்லாவும் பல ஆண்டுகளாக நண்பர்கள். இவர்களின் குடும்பத்தினரும் நண்பர்களாக உள்ளனர். ஜாகியா முல்லாவுக்கும், சபீர் முல்லாவுக்கும் திருமணம் செய்து வைக்க முடிவு செய்தனர்.

இந்நிலையில், கடந்த 20ம் தேதி வெளியே சென்ற ஜாகியா முல்லா, வீடு திரும்ப வில்லை. மறுநாள் காலை வீட்டில் இருந்து சிறிது தொலைவில் உள்ள காலி இடத்தில் அவரின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டது. தார்வாட் ரூரல் போலீசார் விசாரணை நடத்தினர்.

இது குறித்து எஸ்.பி., குன்ஜன் ஆர்யா நேற்று அளித்த பேட்டி:

சபீர் முல்லாவின் நடவடிக்கையில் போலீசாருக்கு சந்தேகம் எழுந்தது. அவரை அழைத்து விசாரித்த போது, ஜாகியாவை கொன்றதை ஒப்புக் கொண்டார். சம்பவ தினத்தன்று இருவரும் காரில் சென்றனர். அப்போது திருமணம் விஷயம் தொடர்பாக இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு உள்ளது. கோபம் அடைந்த சபீர், ஜாகியாவின் கழுத்தை நெரித்து கொலை செய்துவிட்டு, உடலை காலி இடத்தில் வீசி விட்டு சென்றுவிட்டார். கைது செய்யப்பட்ட அவரிடம் போலீசார் விசாரிக்கின்றனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us