UPDATED : நவ 30, 2026 12:00 AM
ADDED : நவ 29, 2026 06:44 PM
பெங்களூரு: லால்பாக் பூங்காவில், வெளி மாநிலத்தைச் சேர்ந்த இரண்டு இளம் பெண்கள், குடுமிப்பிடி சண்டை போட்டனர். கீழே உருண்டு, புரண்டு அடித்து கொண்ட வீடியோ, வைரலாக பரவியுள்ளது.
பெங்களூரின், லால்பாக் பூங்காவுக்கு நேற்று முன் தினம், வெளி மாநிலத்தைச் சேர்ந்த இளம்பெண்கள் வந்திருந்தனர். தாவரங்கள், பூச்செடிகளை பார்த்து கொண்டிருந்த போது, இரண்டு இளம் பெண்களுக்குள், என்ன காரணத்தாலோ காரசார வாக்குவாதம் நடந்தது. ஒரு கட்டத்தில் அடிதடியில் ஈடுபட்டனர்.
இரண்டு இளம் பெண்களும், தலைமுடியை பிடித்து, கீழே விழுந்து புரண்டு சண்டை போட்டனர். அங்கு குவிந்திருந்த பலரும், இந்த காட்சியை பார்த்து தங்கள் மொபைல் போனில் வீடியோ பதிவு செய்தனரே தவிர, பெண்களின் சண்டையை நிறுத்தவோ, சமாதானம் செய்யவோ முயற்சிக்கவில்லை. இந்த சம்பவத்தால் சிறிது நேரம் பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டது.
அமைதியை விரும்பி பொதுமக்கள் பூங்காவுக்கு வருகின்றனர். இத்தகைய இடத்தில் சண்டை போட்டு, குழப்பத்தை ஏற்படுத்துவது சரியல்ல. மக்களின் அமைதி குலைகிறது. இதை தடுக்க போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பொதுமக்கள் வலியுறுத்துகின்றனர்.
