திருமணத்திற்கு மறுத்த நடிகையை அடித்து உதைத்த வாலிபர் கைது
திருமணத்திற்கு மறுத்த நடிகையை அடித்து உதைத்த வாலிபர் கைது
ADDED : ஏப் 17, 2026 05:00 AM
பிரேசர் டவுன்: பெங்களூரு பிரேசர் டவுனில் வசிக்கும், 25 வயது இளம் பெண், திரைப்படங்களில் நடிப்பதுடன், மாடலிங் தொழிலும் செய்கிறார். இவர் ஹிந்து மதத்தை சேர்ந்தவர். இவருக்கு, 2024ல் மாடலிங் துறையில் பணியாற்றும் ஜுஹேப், 28, என்பவர் அறிமுகமானார். நாளடைவில் இவர்கள் நண்பர்களாகினர்.
பணி நிமித்தமாக இருவரும் அவ்வப்போது சந்தித்துக் கொண்டனர். இளம்பெண் நட்பாக பழகியும், தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி ஜுஹேப் தொந்தரவு செய்யத் துவங்கினார். தனக்கு திருமணத்தில் விருப்பம் இல்லை என, இளம்பெண் கூறியதால் கோபமடைந்த ஜுஹேப், 'நீ என்னை திருமணம் செய்ய மறுத்தால், உன்னை கொலை செய்வேன்' என்று மிரட்டினார்.
வாட்ஸாப்பில், ஆபாசமாகவும், மிரட்டியும் மெசேஜ் அனுப்பினார். 'எனக்கு இளம்பெண்களுக்கு பஞ்சம் இல்லை. என்னிடம் பணத்துக்கும் பற்றாக்குறை இல்லை. உன்னை கொன்று போடுவேன்' என்று மெசேஜ் அனுப்பினார்.
நேற்று முன்தினம் இளம்பெண், பிரேசர் டவுனில் இருந்த போது, அங்கு சென்ற ஜுஹேப், கண் மூடித்தனமாக அவரை தாக்கினார். முகத்தில் குத்தினார். இதில், இளம் பெண்ணின் முகம், தலையின் பின் பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெறுகிறார்.
இதுபற்றி பிரே சர் டவுன் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசாரும் ஜுஹேபை கைது செய்து விசாரணை நடத்துகின்றனர்.
