/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
கிரிக்கெட் சூதாட்டம் வாலிபர் கைது
/
கிரிக்கெட் சூதாட்டம் வாலிபர் கைது
ADDED : மே 07, 2025 11:11 PM
கோலார்: கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபட்ட, வாலிபர் கைது செய்யப்பட்டார்.
கர்நாடகாவில், ஐ.பி.எல்., கிரிக்கெட் போட்டிகளை மையமாக வைத்து, ஆன்லைனில் சூதாட்டத்தில் ஈடுபடுபவர்களை சைபர் கிரைம் போலீசார் கண்காணித்து வருகின்றனர்.
இந்நிலையில் கோலாரின் முல்பாகல் டவுனை சேர்ந்த நயாஸ், 28, என்பவர், ஐ.பி.எல்., கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபட்டது தெரிந்தது. பந்து வீசப்படுவதற்கு முன்பே, அடுத்த பந்தில் என்ன நடக்கும் என்று, பணம் வசூலித்து சூதாட்டத்தில் ஈடுபட்டார்.
இதுபற்றி அறிந்த கோலார் சைபர் கிரைம் போலீசார், நயாஷை நேற்று முன்தினம் கைது செய்தனர். அவரிடம் இருந்து இரண்டு மொபைல் போன்கள் மற்றும் 5.20 லட்சம் ரூபாய் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது. இவருடன் சேர்ந்து சூதாட்டத்தில் ஈடுபட்ட, மேலும் சிலரை போலீசார் தேடி வருகின்றனர்.

