ADDED : ஏப் 22, 2026 01:40 AM
அ நிறம் | அளவு
ஹாவேரி: காந்தி சிலையை சேதப்படுத்திய வாலிபர் கைது செய்யப்பட்டு உள்ளார்.
ஹாவேரி டவுன் காந்தி சதுக்கத்தில் உள்ள காந்தி சிலை நேற்று முன்தினம் காலை உடைந்து கிடந்தது. யாரோ மர்மநபர்கள் சிலையை உடைத்து சேதப்படுத்தியது தெரிந்தது. இதனை கண்டித்து காந்தியவாதிகள் போராட்டம் நடத்தினர்.
கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகள் மூலம் வைபவ், 28 என்பவர் நேற்று கைது செய்யப்பட்டார். விசாரணையில் அவர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்று தெரிந்தது. பெற்றோரை வரவழைத்து அறிவுரை கூறி போலீசார் அனுப்பி வைத்தனர்.
