தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ மர்ம உறுப்பில் மரக்கிளை குத்தியதில் இளைஞர் பலி

 மர்ம உறுப்பில் மரக்கிளை குத்தியதில் இளைஞர் பலி

 மர்ம உறுப்பில் மரக்கிளை குத்தியதில் இளைஞர் பலி


ADDED : பிப் 17, 2026 05:38 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 17, 2026 05:38 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஷிவமொக்கா: மரத்தில் கால்நடைகளுக்கு இலை வெட்டும் போது, மர்ம உறுப்பில் மரக்கிளை குத்தியதில் இளைஞர் உயிரிழந்தார்.

ஷிவமொக்கா மாவட்டம் பிராமண மஞ்சாலே கிராமத்தில் வசித்தவர் ஹேமந்த், 27. இவர் தன் கால்நடைகளுக்காக, கிராமத்தை ஒட்டியுள்ள வனப்பகுதிக்கு சென்று, இலைகள் பறித்து வருவது வழக்கம். அதேபோன்று இம்மாதம் 14ம் தேதி காலை, வனப்பகுதிக்கு சென்றார்.

மரத்தின் மீது ஏறி, இலைகளை வெட்டிக் கொண்டிருந்தார். அப்போது, மரக்கிளை அவரது மர்ம உறுப்பில் குத்தியதால், நிலை தடுமாறி கீழே விழுந்தார். இவர் சாலையில் விழுந்து கிடப்பதை கண்ட சிலர், அவரது குடும்பத்தினருக்கு தகவல் தெரிவித்தனர். அவர்களும் அங்கு வந்து, அவரை சாகரா தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர்.

கூடுதல் சிகிச்சைக்காக, நேற்று மங்களூரு அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்லும் போது, வழியிலேயே உயிரிழந்தார்.

ஆனந்தபுரா போலீசார் விசாரிக்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us