காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு இளைஞர் துாக்கிட்டு சாவு
காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு இளைஞர் துாக்கிட்டு சாவு
ADDED : மே 14, 2026 12:32 AM

அம்ருதஹள்ளி: காதலித்த பெண்ணை திருமணம் செய்து கொள்ள, பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால், இளைஞர் தற்கொலை செய்து கொண்டார்.
பெங்களூரின் அம்ருதஹள்ளியில் வசித்தவர் ராம்குமார், 25, இவர் வேறு சமுதாயத்தை சேர்ந்த இளம் பெண்ணை காதலித்தார்.
இவரையே திருமணம் செய்து கொள்ள விரும்பினார். தன் காதல் விஷயத்தை, பெற்றோரிடம் கூறி திருமணம் செய்து வைக்கும்படி கேட்டார்.
ஆனால் இளம்பெண் வேறு ஜாதியை சேர்ந்தவர் என்பதால், திருமணம் செய்ய பெற்றோர் சம்மதிக்கவில்லை.
இதனால் ராம்குமார் மனம் வருந்தினார். நேற்று காலை பெற்றோர் வெளியே சென்றிருந்த போது, அவர் துாக்கிட்டு தற்கொலைக்கு முயற்சித்தார்.
பெற்றோர் வீட்டுக்கு வந்த போது, துாக்கில் தொங்கிய மகனை கீழே இறக்கி, மருத்துவமனைக்கு துாக்கி சென்றனர். ஆனால் சிகிச்சை பலன் அளிக்காமல் ராம்குமார் உயிரிழந்தார்.
அம்ருதஹள்ளி போலீசார் விசாரிக்கின்றனர்.
