ADDED : மார் 25, 2025 12:19 AM
சிக்கமகளூரு,: ரிசார்ட் ஒன்றின் நீச்சல் குளத்தில், தலைகீழாக குதித்த சுற்றுலா பயணி உயிரிழந்தார்.
குடகு, மடிகேரியின், குஷால் நகரில் வசித்தவர் நிஷாந்த், 24. இவர் குஷால் நகரில் மொபைல் போன் கடை வைத்துள்ளார். இவர் தன் நண்பர்களுடன், சுற்றுலாவுக்காக நேற்று முன்தினம் சிக்கமகளூருக்கு வந்திருந்தார். இங்குள்ள தனியார் ரிசார்ட்டில் தங்கி இருந்தனர்.
நேற்று காலை நீச்சல் குளத்துக்கு வந்தனர். அப்போது நிஷாந்த், மேலே இருந்து தலைகீழாக குளத்துக்குள் குதித்தார். இதனால் அவரது தலையில் அடிபட்டு உயிரிழந்தார். நீரில் குதித்து சிறிது நேரமாகியும், அவர் மேலே வரவில்லை.
மூச்சு, பேச்சில்லாமல் மிதப்பதை பார்த்து பீதியடைந்த நண்பர்கள், நிஷாந்தை நீரில் இருந்து, வெளியே எடுத்து வந்தனர். அவர் உயிரிழந்தது தெரிந்தது.
தகவலறிந்து அங்கு வந்த சிக்கமகளூரு போலீசார், நிஷாந்த் உடலை மீட்டனர். இதுகுறித்து விசாரிக்கின்றனர்.