ADDED : ஏப் 23, 2026 04:24 AM
ராஜகோபால்நகர்: புறாவை திருடியதாக கூறி, வாலிபரை கத்தியால் குத்தி கொலை செய்த மூன்று பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.
பெங்களூரு ராஜகோபால்நகரில் வசிப்பவர் சூரி, 30. இவர், புறா பந்தயம் நடத்துகிறார். இவர் வளர்ந்து வந்த புறா ஒன்று, நேற்று முன்தினம் இரவு திடீரென காணாமல் போனது. புறாவை தனது வீட்டின் அருகில் வசிக்கும் மல்லிகார்ஜுன், 25 திருடி இருக்கலாம் என்று சூரிக்கு சந்தேகம் ஏற்பட்டது.
நேற்று காலை சூரி, அவரது நண்பர்கள் தர்ஷன், 27, மகேந்திரா, 28 ஆகியோர், மல்லிகார்ஜுனிடம் சென்று புறாவை திருடியதாக கூறி பிரச்னை செய்தனர். வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பானது. கோபம் அடைந்த 3 பேரும், மல்லிகார்ஜுனை கத்தியால் முதுகில் சரமாரியாக குத்தி விட்டு தப்பினர். ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிய மல்லிகார்ஜுன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
சிகிச்சை பலனின்றி இறந்தார். சூரி, தர்ஷன், மகேந்திராவை, ராஜகோபால்நகர் போலீசார் கைது செய்தனர்.
