UPDATED : அக் 15, 2026 12:00 AM
ADDED : அக் 14, 2026 10:36 PM
பெங்களூரு: தாயுடன் நேற்று முன்தினம் இரவு கோவிலுக்கு புறப்பட்டவர், கண்ணில் மிளகாய் பொடி துாவி, கொலை செய்யப்பட்டார்.
தாவணகெரே மாவட்டம், ஹொன்னாலி நகரின் துர்கிகுடியை சேர்ந்தவர் அமித், 27. ஹொன்னாலி நகராட்சியில் ஒப்பந்த ஓட்டுநர். நேற்று முன்தினம் இரவு, பன்னி மகாகாளி கோவிலுக்கு வந்திருந்தார். அப்போது அவரது கண்ணில் மிளகாய் பொடியை துாவி, சரமாரியாக கத்தியால் குத்தி விட்டு மர்ம நபர் தப்பிஓடினார்.
இதை பார்த்த அமித்தின் தாய், அங்கிருந்தவர்கள், அமித்தை ஷிவமொக்காவில் உள்ள மருத்துவமனைக்கு துாக்கி சென்றனர். ஆனால், செல்லும் வழியிலேயே உயிரிழந்தார்.
அமித்தின் தாய் அளித்த புகாரின்படி, கணேஷ் என்பவர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர். எதற்காக இந்த கொலை நடந்தது, அமித்திற்கு கள்ளத்தொடர்பு உள்ளதா என்பது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.
