ADDED : செப் 17, 2025 07:35 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆன்லைனில்
யுவ தசரா டிக்கெட்
''யுவ தசராவுக்கான டிக்கெட்கள் இன்று முதல் ஆன்லைனில் கிடைக்கும்,'' என, மாவட்ட கலெக்டர் லட்சுமிகாந்த ரெட்டி தெரிவித்தார்.
நேற்று அவர் கூறியது:
மைசூரு புறநகர் பகுதியில் உள்ள உத்தனஹள்ளியில், வரும் 23ம் தேதி 27ம் தேதி வரை யுவ தசரா நடத்தப்படுகிறது. இதற்கான டிக்கெட்கள், இன்று முதல் bookmyshow.comல் கிடைக்கும்.
ஒரு டிக்கெட்டில் விலை, 2,500 ரூபாய் மற்றும் 5,000 ரூபாய் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கடந்தாண்டு 8,000 ரூபாய், 5,000 ரூபாய், 2,500 ரூபாய்.
அதேவேளையில், 'தங்க அட்டை' பெற்றவர்கள், யுவ தசராவை இலவசமாக காண முடியாது. டிக்கெட் பெற்றே காண வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.