/
செய்திகள்
/
வர்த்தகம்
/
வங்கி மற்றும் நிதி
/
கடந்த நிதியாண்டில் 4.70 கோடி வேலைவாய்ப்புகள் உருவாக்கம்: ரிசர்வ் வங்கி
/
கடந்த நிதியாண்டில் 4.70 கோடி வேலைவாய்ப்புகள் உருவாக்கம்: ரிசர்வ் வங்கி
கடந்த நிதியாண்டில் 4.70 கோடி வேலைவாய்ப்புகள் உருவாக்கம்: ரிசர்வ் வங்கி
கடந்த நிதியாண்டில் 4.70 கோடி வேலைவாய்ப்புகள் உருவாக்கம்: ரிசர்வ் வங்கி
ADDED : ஜூலை 10, 2024 12:49 AM

புதுடில்லி: இந்தியா, கடந்த நிதியாண்டில், கிட்டத்தட்ட 4.70 கோடி பேருக்கான வேலைவாய்ப்புகளை உருவாக்கித் தந்துள்ளதாக, ரிசர்வ் வங்கியின் தரவுகள் தெரிவிக்கின்றன.
ரிசர்வ் வங்கியின் ஆதரவுடன் 'இந்திய கே.எல்.இ.எம்.எஸ்.,' எனும் தரவு தளம் இயங்கி வருகிறது. இது, மூலதனம், தொழிலாளர், எரிசக்தி, நுகர்பொருள் மற்றும் சேவைகள் பிரிவுகளில், தொழில்துறை மட்டத்திலான உற்பத்தி திறனை அளவிட்டு, அதன் தரவுகளை வழங்கி வருகிறது.
இதன் தரவுகளின் அடிப்படையில், நாட்டின் வேலைவாய்ப்புக்கான ஆண்டு வளர்ச்சியானது, முந்தைய நிதியாண்டின் 3.20 சதவீதத்துடன் ஒப்பிடுகையில், கடந்த 2023 - 24ம் நிதியாண்டில், ஆறு சதவீதமாக அதிகரித்துள்ளது. மேலும், கடந்த நிதியாண்டில், 4.70 கோடி பேருக்கான வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து, வேலைவாய்ப்பு பெற்ற மொத்த தொழிலாளர்களின் எண்ணிக்கையானது, குறிப்பிட்ட 27 துறைகளில் 64.33 கோடியாக அதிகரித்துள்ளது. முந்தைய நிதியாண்டான 2022 - 23ன் மார்ச் இறுதி நிலவரப்படி, தொழிலாளர்களின் எண்ணிக்கை 59.67 கோடியாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
கடந்த ஐந்து ஆண்டுகளில், மொத்த வேலைவாய்ப்பு எண்ணிக்கை 53.44 கோடியில் இருந்து, 64.33 கோடியாக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.