/
செய்திகள்
/
வர்த்தகம்
/
வங்கி மற்றும் நிதி
/
கேட்பாரின்றி கிடக்கும் லட்சம் கோடி ரூபாய் முதலீடுகள்
/
கேட்பாரின்றி கிடக்கும் லட்சம் கோடி ரூபாய் முதலீடுகள்
கேட்பாரின்றி கிடக்கும் லட்சம் கோடி ரூபாய் முதலீடுகள்
கேட்பாரின்றி கிடக்கும் லட்சம் கோடி ரூபாய் முதலீடுகள்
ADDED : மே 30, 2024 01:17 AM

புதுடில்லி:நம் நாட்டின் நிதித்துறை அபாரமான வளர்ச்சியை கண்டு வருகிறது. இந்த முன்னேற்றம் ஒருபுறம் இருக்க, மற்றொரு புறம் ஒரு நிலையான சவாலையும் சந்தித்து வருகிறது. அது தான், உரிமை கோரப்படாத முதலீடுகள். பங்குகள், மியூச்சுவல் பண்டுகள், வைப்பு நிதிகள் என பல்வேறு பிரிவுகளில், பல்லாயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான முதலீடுகளும், சேமிப்புகளும் நிதி அமைப்பில் அப்படியே தேங்கி நிற்கின்றன.
என்ன காரணம்?@@
உரிமை கோரப்படாத முதலீடுகளைக் கையாளும் அரசின் அமைப்பான ஐ.இ.பி.எப்., எனும், முதலீட்டாளர் கல்வி மற்றும் பாதுகாப்பு நிதியத்தின் தரவுகளின் படி, கடந்தாண்டு மார்ச் மாதம் வரை கிட்டத்தட்ட 25,000 கோடி ரூபாய் மதிப்பிலான பங்கு முதலீடுகள் உரிமை கோரப்படாமல் இருக்கின்றன.
முதலீடுகளுக்கு உரிமை கோரப்படாமல் இருப்பதற்கு பல்வேறு காரணங்கள் இருக்கின்றன. விழிப்புணர்வு போதாமை, செயலற்ற டிமேட் அல்லது வங்கி கணக்குகள், முதலீட்டாளரின் மரணம் ஆகியவை சில முக்கிய காரணங்களாகும்.
இதுபோன்ற முதலீடுகள், முதலீட்டாளருக்கு இழப்பை ஏற்படுத்துவது மட்டுமன்றி, நிதித்துறைக்கும் பல்வேறு சவால்களை ஏற்படுத்துகிறது. செயலற்று கிடக்கும் கணக்குகளை கையாள்வது நிறுவனங்களுக்கு தேவையற்ற செலவுகளை ஏற்படுத்துகிறது. கோரப்படாத டிவிடெண்டுகள் ஒட்டுமொத்த சந்தையின் செயல்திறனையும் பாதிக்கிறது.
இதுதவிர வங்கி கணக்குகள், மியூச்சுவல் பண்டுகள் மற்றும் காப்பீடு திட்டங்களிலும் அதிக மதிப்பிலான கோரப்படாத முதலீடுகள் இருக்கின்றன. திட்டம் குறித்த ஆவணங்கள் இல்லாமல் போவது, நாமினி குறித்த தகவல்களை வழங்காதது, மாற்றப்பட்ட முகவரியை புதுப்பிக்காமல் இருப்பது போன்ற காரணங்களால், இந்த நிலை தொடர்கிறது.
பங்குகள் மட்டுமல்ல
வைப்பு நிதிகளை பொறுத்தவரை, பணிமாற்றங்கள் குறித்த சரியான தகவல்கள் வழங்காமல் இருப்பதால், பலரது கணக்குகளில் பணம் அப்படியே உள்ளது.
இந்த முதலீடுகளையும், சேமிப்புகளையும் மீட்டெடுப்பது என்பது சிரமமான செயல்முறைகளை உள்ளடக்கியது என்றாலும், கஷ்டப்பட்டு சேமித்த இந்த சொத்துக்களை பாதுகாப்பது முதலீட்டாளர்களின் கடமையாகும்.
இன்றைய சூழலில் பல்வேறு நிறுவனங்கள், கோரப்படாத முதலீடுகளை மீட்டுத் தருவதில் நிபுணத்துவத்தோடு செயல்பட்டு வருகின்றன. இவை, சம்பந்தப்பட்ட முதலீட்டாளர்களுக்கும் நிறுவனங்களுக்கும் இடையேயான இணைப்பு பாலமாக இயங்குகின்றன.
முதலீடுகளை திரும்பப் பெற்றுத் தரும் பட்சத்தில், அதில் குறிப்பிட்ட சதவீதத்தை கட்டணமாக வசூலிக்கின்றன.
எதிர்வரும் காலகட்டத்தில் இதுபோன்ற முதலீடுகளை மீட்டெடுப்பதில், தொழில்நுட்பம் முக்கிய பங்கு வகிக்கும். மேலும், தரவு பகுப்பாய்வு மற்றும் செயற்கை நுண்ணறிவு, செயலற்ற கணக்குகளை எளிதாகக் கண்டறிய உதவும்.