sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

வர்த்தகம்

/

வங்கி மற்றும் நிதி

/

'ரூபே டெபிட் செலக்ட் கார்டு' ஏப்ரல் முதல் ஏராளமான சலுகைகள்

/

'ரூபே டெபிட் செலக்ட் கார்டு' ஏப்ரல் முதல் ஏராளமான சலுகைகள்

'ரூபே டெபிட் செலக்ட் கார்டு' ஏப்ரல் முதல் ஏராளமான சலுகைகள்

'ரூபே டெபிட் செலக்ட் கார்டு' ஏப்ரல் முதல் ஏராளமான சலுகைகள்

1


ADDED : மார் 03, 2025 06:58 AM

Google News

ADDED : மார் 03, 2025 06:58 AM

1


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி : ஏப்ரல் முதல் தேதியிலிருந்து 'ரூபே டெபிட் செலக்ட் கார்டு'தாரர்களுக்கு புதிய சலுகைகளை என்.பி.சி.ஐ., அறிமுகப்படுத்துகிறது-.

என்.பி.சி.ஐ., எனப்படும் இந்திய தேசிய பண பட்டுவாடா நிறுவனம், ரூபே டெபிட் செலக்ட் கார்டு வைத்துள்ள வாடிக்கையாளர்களுக்கு, பல்வேறு புதிய சலுகைகளை ஏப்., 1ம் தேதி முதல் வழங்க உள்ளது.

சலுகைகள்


விமான நிலைய ஓய்வறை: உள்நாட்டு விமான ஓய்வறைகளை காலாண்டுக்கு ஒருமுறையும், சர்வதேச விமான ஓய்வறைகளை ஆண்டுக்கு இருமுறையும் பயன்படுத்திக் கொள்ளலாம்

தனிப்பட்ட விபத்து காப்பீடு: விபத்து மரணம் அல்லது நிரந்தர ஊனம் ஏற்பட்டால், 10 லட்சம் ரூபாய் வரை காப்பீடு. இந்த காப்பீடுக்கு, விபத்துக்கு முந்தைய 30 நாட்களுக்குள் குறைந்தபட்ச பரிவர்த்தனை மேற்கொண்டிருக்க வேண்டும்.

ஜிம் உறுப்பினர்கள்: காலாண்டுக்கு ஒரு முறை இலவச ஜிம் உறுப்பினர் சேர்க்கை. இதில் பயனாளிகள் 90 நாட்கள் வீட்டு உடற்பயிற்சி அல்லது 30 நாட்கள் ஆப்லைன் உடற்பயிற்சி - இதில் ஏதாவது ஒன்றை தேர்வு செய்யலாம்.

மருத்துவ பரிசோதனை: ஒவ்வொரு காலாண்டிற்கும் ஒரு இலவச மருத்துவ பரிசோதனை தொகுப்பை பெறலாம்.

கோல்ப்: ஒவ்வொரு காலாண்டிற்கும் ஒரு இலவச கோல்ப் பயிற்சி அல்லது விளையாடும் வாய்ப்பு

ஸ்பா அல்லது சலுான் கூப்பன்கள்: ஒவ்வொரு காலாண்டிற்கும் ஒரு இலவச ஸ்பா அல்லது சலுான் சேவைகளை பெறலாம்.

ஓ.டி.டி., சந்தா: அமேசான் பிரைம், ஹாட்ஸ்டார் அல்லது சோனி லைவ் ஓ.டி.டி., தளங்களுக்கு 12 மாத இலவச சந்தாவை பெறலாம்.






      Dinamalar
      Follow us