/
செய்திகள்
/
வர்த்தகம்
/
வங்கி மற்றும் நிதி
/
வங்கிகள் வழங்கும் கடன் வளர்ச்சி 11 சதவீதமாக சரிவு
/
வங்கிகள் வழங்கும் கடன் வளர்ச்சி 11 சதவீதமாக சரிவு
வங்கிகள் வழங்கும் கடன் வளர்ச்சி 11 சதவீதமாக சரிவு
வங்கிகள் வழங்கும் கடன் வளர்ச்சி 11 சதவீதமாக சரிவு
ADDED : ஏப் 06, 2025 12:45 AM

மும்பை:கடந்த நிதியாண்டில், கடன் அளிப்பில் வங்கிகளின் வளர்ச்சி 11 சதவீதமாக சரிவு கண்டிருப்பதாக, ரிசர்வ் வங்கி வெளியிட்ட புள்ளிவிபரம் தெரிவிக்கிறது.
மேலும் அதில் தெரிவித்துள்ளதாவது:
கொரோனாவுக்கு பிந்தைய இரண்டு ஆண்டுகளில் அதிக வளர்ச்சி கண்டிருந்த வங்கிகளின் கடன் வளர்ச்சி, கடந்த 2023 - 24ம் நிதியாண்டில் 20.20 சதவீதமாக பதிவாகி இருந்தது.
பல்வேறு காரணங்களால், கடந்த நிதியாண்டில் 11 சதவீதமாக குறைந்துள்ளது. அதிக வட்டி விகிதம், ஆபத்தான தனிநபர் கடன்களுக்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடு, கடன் வழங்குவதற்காக டிபாசிட்டுகளை திரட்ட வங்கிகள் சந்தித்த சவால்கள் காரணமாக, கடந்த நிதியாண்டில் கடன் வளர்ச்சி சரிவை கண்டிருப்பதாக வங்கியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
வங்கிகளின் டிபாசிட் வளர்ச்சியும், 2023 - 24ம் நிதியாண்டில் 13.50 சதவீதமாக இருந்த நிலையில், 2024 -- -25ம் நிதியாண்டில் 10.30 சதவீதமாக குறைந்துள்ளது. கடன் மற்றும் டிபாசிட் வளர்ச்சி விகிதம் இடையே நிலவும் இடைவெளி கவலையளிக்கிறது.
வங்கிகள் தங்களது வணிக மாதிரியை மறுசீரமைப்பு செய்து, டிபாசிட்டுகளை அதிகரிக்கச் செய்ய வேண்டும்.
இவ்வாறு தெரிவித்துஉள்ளது.