/
செய்திகள்
/
வர்த்தகம்
/
வங்கி மற்றும் நிதி
/
சிட்டி யூனியன் வங்கி நிகர லாபம் ரூ.286 கோடி
/
சிட்டி யூனியன் வங்கி நிகர லாபம் ரூ.286 கோடி
ADDED : பிப் 01, 2025 01:32 AM

சென்னை:சிட்டி யூனியன் வங்கி, நடப்பு நிதியாண்டின் மூன்றாம் காலாண்டில் நிகர லாபமாக, 286 கோடி ரூபாயை ஈட்டியுள்ளது.
தஞ்சை மாவட்டம், கும்பகோணத்தில் தலைமை அலுவலகத்தை கொண்டு செயல்படும் சிட்டி யூனியன் வங்கியின், 2024 - 25 நிதியாண்டின் மூன்றாம் காலாண்டு கணக்கு முடிவை, சென்னையில் தலைமை செயல் அதிகாரி காமகோடி நேற்று வெளியிட்டார்.நடப்பு நிதியாண்டின் மூன்றாம் காலாண்டில், வங்கியின் மொத்த வருமானம், 1,707 கோடி ரூபாயாக உள்ளது. இதர வருமானம், 228 கோடி ரூபாயாகவும், மொத்த லாபம், 436 கோடி ரூபாயாகவும், நிகர லாபம், 286 கோடி ரூபாயாகவும் உள்ளது.
இந்த நிதியாண்டின் முதல் ஒன்பது மாதங்களில் வங்கியின் மொத்த வியாபாரம், 1.08 லட்சம் கோடி ரூபாயாக உள்ளது. வங்கியின் வைப்பு தொகை மற்றும் கடன்கள் முறையே, 58,271 கோடி ரூபாயாகவும், 50,409 கோடி ரூபாயாகவும் உள்ளது.