/
செய்திகள்
/
வர்த்தகம்
/
வங்கி மற்றும் நிதி
/
மார்ச் 15 வரை அவகாசம் : ரிசர்வ் வங்கி
/
மார்ச் 15 வரை அவகாசம் : ரிசர்வ் வங்கி
ADDED : பிப் 17, 2024 12:54 AM

வரும் மார்ச் 15ம் தேதிக்கு முன்னதாக, 'பேடிஎம் பேமென்ட்ஸ்' வங்கியின் வாடிக்கையாளர்களும், வர்த்தகர்களும் தங்களது வங்கிக் கணக்குகளை பிற வங்கிகளுக்கு மாற்றிக்கொள்ளுமாறு, ரிசர்வ் வங்கி அறிவுறுத்தியுள்ளது.
முன்பு, பிப்ரவரி 29ம் தேதி வரை இதற்கான காலக்கெடு வழங்கப்பட்டிருந்த நிலையில், தற்போது வாடிக்கையாளர்களின் சிரமங்களை கருத்தில் கொண்டு, மேலும் 15 நாட்களுக்கு அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
எனினும், இதன் பின்னரும் வாடிக்கையாளர்களும், வர்த்தகர்களும் அவர்களது வங்கிக் கணக்குகளில் உள்ள இருப்புத்தொகையை, தொடர்ந்து பயன்படுத்த முடியும் என்று ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
மார்ச் 15ம் தேதிக்கு பின், பேடிஎம் வங்கியின் வாடிக்கையாளர்கள், அவர்களது வங்கிக் கணக்குகளில் பணத்தை செலுத்த அனுமதிக்கப்பட மாட்டார்கள்.
சம்பளம் மற்றும் பென்ஷன் ஆகியவையும் மார்ச் 15ம் தேதிக்குப் பின், அவர்களது வங்கிக் கணக்குகளில் இருப்பு வைக்கப்படாது. மேலும், இந்த கணக்குகளிலிருந்து இ.எம்.ஐ., மற்றும் பிற பில்களை செலுத்தி வருவோரும் மாற்று ஏற்பாடுகளை செய்துகொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள்.
இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.