/
செய்திகள்
/
வர்த்தகம்
/
வங்கி மற்றும் நிதி
/
எச்.டி.எப்.சி.,க்கு ரூ.75 லட்சம் அபராதம்
/
எச்.டி.எப்.சி.,க்கு ரூ.75 லட்சம் அபராதம்
ADDED : மார் 28, 2025 12:56 AM

கே.ஒய்.சி., விதிமுறைகளை சரிவரப் பின்பற்றவில்லை எனக் கூறி, எச்.டி.எப்.சி.,வங்கிக்கு 75 லட்சம் ரூபாய் அபராதம் விதித்து, ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது.
இதுகுறித்து, ரிசர்வ் வங்கி வெளியிட்ட அறிவிக்கையில் தெரிவித்துள்ளதாவது:
எச்.டி.எப்.சி., வாடிக்கையாளர்களை மதிப்பீடு செய்து, குறைந்த, மத்திய மற்றும் அதிக ஆபத்து பிரிவுகள் அடிப்படையில் வகைப்படுத்தவில்லை. மேலும், ஆபத்து அடிப்படையில், வாடிக்கையாளர்களுக்கு தனித்துவமான அடையாள குறியீடு அளிக்காமல், பல்வேறு அடையாள குறியீடுகளை அளித்துள்ளது.
ரிசர்வ் வங்கியின் உத்தரவுக்கு இணங்காமல் இருப்பதற்கு ஏன் அபராதம் விதிக்கக்கூடாதென பதிலளிக்குமாறு முதலில் நோட்டீஸ் அனுப்பப்பட்டது. இதற்கு, எச்.டி.எப்.சி., வங்கியின் சார்பில் அனுப்பப்பட்ட பதிலை பரிசீலித்து, அது ஏற்புடையதல்ல என முடிவு செய்த பின்னரே அபராதம் விதிக்க முடிவு செய்யப்பட்டது.
இவ்வாறு அதில் தெரிவித்துள்ளது.