sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 29, 2025 ,ஐப்பசி 12, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

வர்த்தகம்

/

வங்கி மற்றும் நிதி

/

குடும்பத்தில் நிதி சார்ந்த மோதல்களை தவிர்ப்பது எப்படி?

/

குடும்பத்தில் நிதி சார்ந்த மோதல்களை தவிர்ப்பது எப்படி?

குடும்பத்தில் நிதி சார்ந்த மோதல்களை தவிர்ப்பது எப்படி?

குடும்பத்தில் நிதி சார்ந்த மோதல்களை தவிர்ப்பது எப்படி?


ADDED : ஏப் 13, 2025 07:05 PM

Google News

ADDED : ஏப் 13, 2025 07:05 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நிதி முடிவுகளை தன்னிச்சையாக எடுப்பதைவிட கணவன், மனைவி கலந்தாலோசித்து மேற்கொள்வதே சரியானது. அதே போல, நிதி விஷயங்கள் தொடர்பாக குடும்பத்தில் மோதல் வராமல் இருப்பதும் அவசியம்.

எனினும், ஒவ்வொருவரும் பணத்தை கையாளும் தன்மை மாறுபட்டது என்பதால், சில நேரங்களில் நிதி சூழல் அல்லது நிதி முடிவு, கருத்து வேறுபாட்டை உருவாக்கலாம். இது மோதலாக மாறி, குடும்ப அமைதியை பாழாக்கும் அபாயமும் இருப்பதால், நிதி மோதல்களை தவிர்க்கும் வழிகளை அறிந்திருப்பது அவசியம்.

நிதி ஆளுமைகள்:


முதலில் ஒவ்வொருவருக்கும் பணம் சார்ந்த மாறுபட்ட அணுகுமுறை இருக்கும் என்பதை புரிந்து கொள்ள வேண்டும். ஒருவர் பணத்தை தாராளமாக செலவு செய்யும் சூழலில் வளர்ந்து இருக்கலாம். இன்னொருவர் சிக்கனத்தை மூல அம்சமாக கொண்டிருக்கலாம். இந்த பணம் சார்ந்த ஆளுமை குணத்தை புரிந்து கொள்ள வேண்டும்.

உரையாடல் தேவை:


நிதி முடிவு தொடர்பாக வாதிட வேண்டிய சூழல் ஏற்பட்டால், மற்றவர் என்ன நினைக்கிறார் என்பதை அறிந்து கொள்ள வேண்டும். இதற்கு வெளிப்படையானஉரையாடல் கைகொடுக்கும். மற்றவரும் நிதி முடிவு எடுக்கஅனுமதிக்க வேண்டும். இது, பரஸ்பரம் இருவரது நிதி

அணுகுமுறையை புரிந்து கொள்ள வைக்கும்.

நிதி வேறுபாடு:


குறிப்பிட்ட விஷயத்தில் நிதி வேறுபாடு இருந்தால், முடிவெடுப்பதற்கு முன், அது குறித்து பேச

வேண்டும். முடிவெடுத்துவிட்டு அது பற்றி விவாதிப்பது வீண் சச்சரவில் முடியும். மாறாக, முன்கூட்டியே பேசுவது, நிதி சூழலுக்கு பொருத்தமான முடிவை மேற்கொள்ள வழி செய்யும்.

விதிமுறைகள் தேவை:


நிதி முடிவுகளை மேற்கொள்ள குடும்பத்திற்கு என பொதுவான விதிமுறைகளை, வரம்புகளை வகுத்துக்கொள்வது பயனுள்ளதாக இருக்கும். விடுமுறைக்காக, வாழ்வியல் செலவுக்காக இவ்வளவுசெலவு செய்யலாம் என்பது போல முதலிலேயே தீர்மானித்து கொள்வது வழிகாட்டும்.

நிதி இலக்குகள்:


நீண்ட கால நிதி இலக்குகளை உண்டாக்கி, அவற்றுக்கான நிதி திட்டத்தையும் வகுத்துக்கொள்வது நல்லது. கல்வி, ஓய்வு காலம் போன்ற இலக்குகளுக்கான நிதி திட்டங்களை வகுத்துக்கொண்டால், மற்ற விஷயங்களில் எளிதாக சமரசம் காணலாம். அனைத்து பொறுப்புகளையும் மனதில் கொண்டு திட்டமிடுவது அவசியம்.






      Dinamalar
      Follow us