/
செய்திகள்
/
வர்த்தகம்
/
வங்கி மற்றும் நிதி
/
ரூ.8,800 கோடி திரட்ட ஹட்கோ திட்டம்
/
ரூ.8,800 கோடி திரட்ட ஹட்கோ திட்டம்
ADDED : நவ 16, 2025 11:41 PM

புதுடில்லி: ஆசிய வளர்ச்சி வங்கி உள்ளிட்ட சர்வதேச நிதி நிறுவனங்களிடமிருந்து, வரும் மார்ச் மாதத்துக்குள் 8,800 கோடி ரூபாய் திரட்ட பேச்சு நடத்தி வருவதாக பொதுத்துறை நிறுவனமான 'ஹட்கோ' தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அதன் தலைவர் சஞ்சய் குல்சிரேஷ்டா தெரிவித்ததாவது:
நாட்டின் முக்கிய அடிப்படை கட்டுமான திட்டங்களில் முதலீடு செய்ய ஹட்கோ திட்டமிட்டுள்ளது. இதற்காக ஜெர்மனி அரசுக்குச் சொந்தமான வீட்டுவசதி நிறுவனமான கே.எப்.டபிள்யு.,விடம் 1,760 கோடி ரூபாய் முதலீடு பெற பேச்சு நடக்கிறது.
இதுதவிர, நடப்பு நிதியாண்டில், ஆசிய வளர்ச்சி வங்கியிடமிருந்து 4,400 கோடி ரூபாயும், ஆசிய உள் கட்டமைப்பு முதலீட்டு வங்கியிடமிருந்து 2,640 கோடி ரூபாயும் கடன் பெற முயற்சி நடக்கிறது.
அடிப்படை கட்டுமான திட்டங்களுக்காக தேவைப்படும் 8,800 கோடி ரூபாய் கடனை நடப்பு நிதியாண்டில் திரட்டிவிடுவோம். வெளிநாட்டு கடனுதவி வாயிலாக வட்டி சுமை குறையும்.
நிறுவனத்தின் செயல்திறனை மேம்படுத்த அரசின் அனுமதியுடன் மூலதன ஆதாய பத்திரங்களை வெளியிட்டு, நடப்பாண்டு 50 கோடி ரூபாய் திரட்டப்பட்டுள்ளது. வரும் மாதங்களில் மேலும் 150 கோடி ரூபாய் திரட்டப்படும். அடுத்த 15 மாதங்களில் வாராக்கடனை பூஜ்ஜியமாக்க உள்ளோம்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.

