/
செய்திகள்
/
வர்த்தகம்
/
வங்கி மற்றும் நிதி
/
'முத்ரா' கடன் உச்சவரம்பு ரூ.20 லட்சமாக அதிகரிப்பு
/
'முத்ரா' கடன் உச்சவரம்பு ரூ.20 லட்சமாக அதிகரிப்பு
'முத்ரா' கடன் உச்சவரம்பு ரூ.20 லட்சமாக அதிகரிப்பு
'முத்ரா' கடன் உச்சவரம்பு ரூ.20 லட்சமாக அதிகரிப்பு
ADDED : அக் 26, 2024 03:51 AM

புதுடில்லி:'பிரதம மந்திரி முத்ரா யோஜனா' திட்டத்தின் கீழ் வழங்கப்படும் 10 லட்சம் ரூபாய் கடன் வரம்பை இரட்டிப்பாக்கி, 20 லட்சம் ரூபாயாக உயர்த்தி மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
நாட்டில் தொழில்முனைவோரை மேம்படுத்துவதற்காக, பி.எம்.எம்.ஒய்., எனப்படும் பிரதம மந்திரி முத்ரா யோஜனா திட்டத்தின் கீழ் கடன் வழங்கப்படுகிறது. இதில் சிசூ, கிஷோர் மற்றும் தருண் என மூன்று பிரிவுகளின் கீழ் கடன் வழங்கப்படுகிறது. தருண் பிரிவின் கீழ் இதுவரை 10 லட்சம் ரூபாய் வழங்கப்பட்டு வந்தது.
அரசு தற்போது வெளியிட்டுள்ள புதிய அறிவிப்பின்படி, 'தருண் பிளஸ்' எனும் மற்றொரு பிரிவின் வாயிலாக, தருண் பிரிவின் கீழ் கடனை பெற்று முறையாக திருப்பிச் செலுத்திய தொழில்முனைவோருக்கு, கூடுதலாக 10 லட்சம் ரூபாய் கடன் கிடைக்க வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில், முத்ரா யோஜனா திட்டத்தின் கடன் வரம்பு இரட்டிப்பாகி, 20 லட்சம் ரூபாயாக அதிகரித்துள்ளது.