/
செய்திகள்
/
வர்த்தகம்
/
வங்கி மற்றும் நிதி
/
தொழில் துறை வங்கி கடன் ஏப்ரலில் 6.70%ஆக சரிவு
/
தொழில் துறை வங்கி கடன் ஏப்ரலில் 6.70%ஆக சரிவு
ADDED : மே 31, 2025 10:46 PM

புதுடில்லி :கடந்த ஏப்ரல் மாதத்தின் முதல் இரண்டு வாரங்களில், தொழில் துறை நிறுவனங்களுக்கான வங்கிகளின் கடன் வளர்ச்சி 6.70 சதவீதமாக குறைந்துள்ளது என, ரிசர்வ் வங்கி தரவுகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலோகம், ஜவுளி, வாகனம், கட்டுமானம் ஆகிய துறைகளுக்கான கடன் வளர்ச்சி அதிகரித்துள்ள நிலையில், உள்கட்டமைப்பு, விவசாயத் துறைகளுக்கான கடன் வளர்ச்சி சற்று குறைந்துள்ளது. கடந்த ஏப்ரல் 4 முதல் 18 வரையிலான இரண்டு வாரங்களில், நிறுவனங்களுக்கான வங்கிக் கடன் வளர்ச்சி 6.70 சதவீதமாக சரிந்து, 38.70 லட்சம் கோடி ரூபாயாக இருந்தது. இது கடந்தாண்டின் இதே காலக்கட்டத்தில் 6.90 சதவீதமாக இருந்தது.
கடந்தாண்டு ஏப்ரல் மாதத்துடன் ஒப்பிடுகையில், தங்க நகைக் கடன் கிட்டத்தட்ட 120 சதவீதம் அதிகரித்துள்ளது. கடந்தாண்டு ஏப்ரலில் 1.01 லட்சம் கோடி ரூபாயாக இருந்த நிலையில், நடப்பாண்டில் 2.23 லட்சம் கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.