/
செய்திகள்
/
வர்த்தகம்
/
வங்கி மற்றும் நிதி
/
ரூ.34 லட்சம் கோடிக்கு 'முத்ரா' திட்டத்தில் கடன்
/
ரூ.34 லட்சம் கோடிக்கு 'முத்ரா' திட்டத்தில் கடன்
ADDED : நவ 27, 2025 11:45 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
'மு த்ரா' திட்டத்தின் கீழ், வங்கிகள் இதுவரை 55 கோடி வாடிக்கையாளர்களுக்கு எந்த பிணையமும் இன்றி, 34 லட்சம் கோடி ரூபாய் கடன் வழங்கியுள்ளதாக, மத்திய நிதித்துறை இணை அமைச்சர் பங்கஜ் சவுத்ரி தெரிவித்துள்ளார்.
'பிரதம மந்திரி முத்ரா யோஜனா' திட்டம் கடந்த 2015 ஏப்ரல் மாதம் அறிமுகப்படுத்தப்பட்டது. இத்திட்டத்தின் கீழ் சிறு, குறு நிறுவனங்களுக்கும், 18 முதல் 65 வயது வரையிலான தனிநபர்களுக்கும், வணிக நோக்கங்களுக்காக, அதிகபட்சமாக 20 லட்சம் ரூபாய் வரை பிணையில்லாத கடன் வழங்கப்படுகிறது.

