/
செய்திகள்
/
வர்த்தகம்
/
வங்கி மற்றும் நிதி
/
ஆயுள் காப்பீடு வணிகத்தில் கால்பதிக்கும் மஹிந்திரா
/
ஆயுள் காப்பீடு வணிகத்தில் கால்பதிக்கும் மஹிந்திரா
ஆயுள் காப்பீடு வணிகத்தில் கால்பதிக்கும் மஹிந்திரா
ஆயுள் காப்பீடு வணிகத்தில் கால்பதிக்கும் மஹிந்திரா
ADDED : நவ 13, 2025 11:52 PM

புதுடில்லி: வாகன தயாரிப்பில் ஈடுபட்டு வரும் மஹிந்திரா அண்டு மஹிந்திரா நிறுவனம், ஆயுள் காப்பீடு வணிகத்தில் ஈடுபட உள்ளதாக அறிவித்துள்ளது. இதற்காக, கனடாவைச் சேர்ந்த 'மேன்யூலைப் பைனான்சியல் கார்ப்பரேஷன்' நிறுவனத்துடன் சரிபாதி பங்குகளை கொண்ட கூட்டு நிறுவனம் துவங்க ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது.
இந்த ஒப்பந்தத்துக்கு காப்பீடு ஒழுங்குமுறை ஆணையத்தின் ஒப்புதல் கிடைத்ததும், காப்பீடு உரிமம் கோரி விண்ணப்பம் தாக்கல் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த இரண்டு நிறுவனங்களும் இணைந்து, கடந்த 2020 முதல் 'மஹிந்திரா மேன்யூலைப் இன்வெஸ்ட்மென்ட் மேனேஜ்மென்ட்' என்ற நிறுவனத்தை நடத்தி வருகின்றன. தற்போது இந்த கூட்டணியை ஆயுள் காப்பீடு வணிகத்துக்கும் விரிவுபடுத்த முடிவு செய்துள்ளன.
இதன்படி, அடுத்த 10 ஆண்டுகளில் இரு நிறுவனங்களும் தலா 3,600 கோடி ரூபாய் முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளன.
ஐந்து ஆண்டுகளுக்குள்ளாக தலா 1,250 கோடி ரூபாய் முதலீடு செய்யப்படும் என்றும், தேவையான உள்கட்டமைப்பு மற்றும் வினியோக கட்டமைப்பை உருவாக்குவதில் கவனம் செலுத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஐந்து ஆண்டுகளில், இந்தியாவின் ஆயுள் காப்பீடு சந்தை சராசரியாக 12 சதவீதம் வளர்ச்சி

