/
செய்திகள்
/
வர்த்தகம்
/
வங்கி மற்றும் நிதி
/
திருவள்ளூரில் ரூ.250 கோடிக்கு மெட்ரோ துளையிடும் இயந்திர ஆலை
/
திருவள்ளூரில் ரூ.250 கோடிக்கு மெட்ரோ துளையிடும் இயந்திர ஆலை
திருவள்ளூரில் ரூ.250 கோடிக்கு மெட்ரோ துளையிடும் இயந்திர ஆலை
திருவள்ளூரில் ரூ.250 கோடிக்கு மெட்ரோ துளையிடும் இயந்திர ஆலை
ADDED : அக் 06, 2025 11:49 PM

சென்னை, மெட்ரோ ரயில் திட்டத்திற்கான சுரங்கப்பாதை துளையிடும் இயந்திரங்களை உற்பத்தி செய்யும், 'ஹெர்ரென்க்நெக்ட்' நிறுவனம், திருவள்ளூர் மாவட்டத்தில், 250 கோடி ரூபாய் முதலீட்டில், 12.50 ஏக்கரில் ஆலை அமைக்கிறது.
ஜெர்மனியை சேர்ந்த ஹெர்ரென்க்நெக்ட் நிறுவனம், மெட்ரோ ரயில் திட்டங்களுக்கு சுரங்க பாதை துளையிடும் சாதனங்களை உற்பத்தி செய்கிறது. இந்நிறுவனத்துக்கு, திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி தாலுகாவில், சுரங்க பாதை துளையிடும் சாதனங்களை ஒருங்கிணைக்கும் ஆலை உள்ளது.
தற்போது, இந்நிறுவனம் திருவள்ளூரில் உள்ள கன்னிகைப்பேரில், 12.50 ஏக்கரில், 250 கோடி ரூபாய் முதலீட்டில் ஆலை அமைக்க உள்ளது. இதன் வாயிலாக, 400 வேலைவாய்ப்புகள் உருவாகும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழகத்தில் முதலீடுகளை ஈர்க்க, முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான குழு, ஜெர்மனி மற்றும் பிரிட்டன் நாடுகளுக்கு சமீபத்தில் சென்றிருந்தது. அப்போது, ஹெர்ரென்க்நெக்ட் நிறுவனம் மற்றும் தமிழக அரசின் வழிகாட்டி நிறுவனம் இடையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.