/
செய்திகள்
/
வர்த்தகம்
/
வங்கி மற்றும் நிதி
/
சரியான கணக்குக்கு தான் பணம் செல்கிறதா? அறிந்து கொள்ள செபியின் புதிய வசதி
/
சரியான கணக்குக்கு தான் பணம் செல்கிறதா? அறிந்து கொள்ள செபியின் புதிய வசதி
சரியான கணக்குக்கு தான் பணம் செல்கிறதா? அறிந்து கொள்ள செபியின் புதிய வசதி
சரியான கணக்குக்கு தான் பணம் செல்கிறதா? அறிந்து கொள்ள செபியின் புதிய வசதி
ADDED : அக் 02, 2025 11:40 PM

பங்கு தரகர்கள், முதலீட்டு ஆலோசகர்கள், ரிசர்ச் அனலிஸ்ட்கள் போன்ற பதிவு பெற்ற நிறுவனங்களுக்கென , தனிப்பட்ட 'யு.பி.ஐ., ஹேண்டில்' வசதியை, இம்மாதம் முதல் தேதியிலிருந்து, செபி அறிமுகம் செய்துள்ளது. நாம் சரியான நிறுவனத்துக்கு தான் பணத்தை அனுபுகிறோமா என சரிபார்த்துக் கொள்ளவும், மோசடி பேர்வழிகளிடம் ஏமாறாமல் இருக்கவும் இந்த வசதி பயன்படும். இந்த யு.பி.ஐ., ஹேண்டில்கள், '@valid' என்ற தனித்துவமான வார்த்தையை கொண்டதாக இருக்கும்.
இந்த தனித்துவமான யு.பி.ஐ., ஹேண்டில்களை, என்.பி.சி.ஐ., ஒத்துழைப்புடன் பதிவு பெற்ற நிறுவனங்களுக்கு செபி வழங்கியுள்ளது.
ஒவ்வொரு பதிவு பெற்ற சேவை வழங்கும் பிரிவினருக்கும், அவர்களுடைய பெயருக்குப் பின்னால் தனித்துவமான ஒரு பிற்சேர்க்கை குறியீடானது வழங்கப்பட்டுள்ளது.
உதாரணத்திற்கு, 'ஏபிசி' எனும் பெயர் கொண்ட ஷேர் ப்ரோக்கர் நிறுவனத்தின் 'வேலிட் யு.பி.ஐ., ஹேண்டில்' அவர்களுடைய வங்கிக் கணக்கு எச்.டி.எப்.சி., வங்கியில் இருந்தால் abc.brk@validhdfc என்றும்; 'எக்ஸ்ஒய்இசட்' எனும் மியூச்சுவல் பண்டிற்கு, அவர்களுடைய வங்கிக் கணக்கு ஐ.சி.ஐ.சி.ஐ., வங்கியில் இருந்தால், யு.பி.ஐ., ஐடியானது xyz.mf@validicici என்றும் இருக்கும்.
இப்படி நிறுவனத்தின் பெயருக்குப் பின்னால் இருக்கும் அவர்கள் செயல்படும் பிரிவின் குறியீடும், @valid என்ற வார்த்தையும், முதலீட்டாளர்கள் தாங்கள் சரியான கணக்கிற்குத் தான் பணத்தை அனுப்புகிறோம் என்பதை ஊர்ஜிதம் செய்துகொள்ள உதவியாக இருக்கும்.