/
செய்திகள்
/
வர்த்தகம்
/
வங்கி மற்றும் நிதி
/
எம்.எஸ்.எம்.இ.,களுக்கு ஐ.பி.ஓ.,வில் அதிக வாய்ப்பு: 'செபி'
/
எம்.எஸ்.எம்.இ.,களுக்கு ஐ.பி.ஓ.,வில் அதிக வாய்ப்பு: 'செபி'
எம்.எஸ்.எம்.இ.,களுக்கு ஐ.பி.ஓ.,வில் அதிக வாய்ப்பு: 'செபி'
எம்.எஸ்.எம்.இ.,களுக்கு ஐ.பி.ஓ.,வில் அதிக வாய்ப்பு: 'செபி'
ADDED : டிச 02, 2025 01:02 AM

'தெ ன் மாநிலங்களை சேர்ந்த சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்களின் நிதி நிலை சிறப்பாக உள்ளது. அந்நிறுவனங்கள், பங்கு சந்தைகளில் புதிய பங்குகளை வெளியிட்டு, நிதி திரட்டுவதற்கு அதிக வாய்ப்பு உள்ளது' என, 'செபி' தலைவர் துஹின் காந்த பாண்டே தெரிவித்தார்.
சென்னையில் நேற்று அவர், சி.ஐ.ஐ., எனப்படும் இந்திய தொழில் கூட்டமைப்பின் சார்பில் நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:
பங்கு சந்தைகளில் பட் டியலிடப்பட்ட நிறுவனங்கள், நிறுவனத்தின் விபரங் களை பங்கு சந்தைகளுக்கு தனித்தனியே தெரிவிக் கின்றன. இந்த விபரங்கள் ஒரே, 'போர்ட்டலில்' தெரிவிக்கும் வசதி கொண்டு வரப்பட உள்ளது.
முதலீட்டாளர்களின் முதலீட்டை பாதுகாக்க பல விதிமுறைகள் கொண்டு வரப்பட்டுள்ள நிலையில், புதிதாக மேலும் கொண்டு வரப்படும்.
'ஸ்டார்ட் அப்' எனப்படும் புத்தொழில் நிறுவனங்களில் முதலீடு செய்யும் முதலீட்டாளர்கள், நிறுவனங்களின் விபரங்களை பற்றி முழுமையாக தெரிந்து கொள்வதற்கான நடைமுறைகள் எளிமையாக்கப்படும்.
தென் மாநிலங்களை சேர்ந்த சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்களின், நிதிநிலைமை வலுவாக உள்ளன. அந்நிறுவனங்கள், பங்கு சந்தைகளில் பங்குகளை வெளியிட்டு, நிதி திரட்டுவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளன. இதை, நிறுவனங்கள் பயன்படுத்தி, பயன்பெற வேண்டும். வணிகம் செய்வதை எளிதாக்குவதற்கு, 'செபி' உறுதி கொண்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.

