/
செய்திகள்
/
வர்த்தகம்
/
வங்கி மற்றும் நிதி
/
எந்த வங்கியிலும் ஓய்வூதியம் எடுக்கலாம் நடைமுறைக்கு வந்தது புதிய வசதி

ADDED : ஜன 01, 2025 11:39 PM

புதுடில்லி:இ.பி.எஸ்., எனும் பணியாளர் பென்ஷன் திட்டத்தின் கீழ் ஓய்வூதியம் பெறுபவர்கள், இந்தியாவில் உள்ள எந்த ஒரு வங்கியின் கிளையிலிருந்தும் தங்களது ஓய்வூதியத்தை எடுத்துக்கொள்ளும் வசதி, நேற்று முதல் நடைமுறைக்கு வந்துள்ளது.
சி.பி.பி.எஸ்., எனும் இந்த மையப்படுத்தப்பட்ட பென்ஷன் பேமென்ட் வசதியை, மத்திய தொழிலாளர் நலத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா நேற்று துவங்கி வைத்தார். இதன் வாயிலாக 78 லட்சம் இ.பி.எஸ்., உறுப்பினர்கள் பயனடைவர் என அமைச்சர் தெரிவித்தார்.
கடந்த செப்டம்பர் மாதம் அறிவிக்கப்பட்ட இத்திட்டத்தின் வாயிலாக, இ.பி.எஸ்., ஓய்வூதியதாரர்கள், நாட்டிலுள்ள எந்த ஒரு வங்கி அல்லது வங்கிக் கிளை வாயிலாகவும் தங்களது ஓய்வூதியத்தைப் பெற்றுக்கொள்ள முடியும்.
வங்கிக் கணக்கை வேறு வங்கிக்கு மாற்றிக் கொண்டாலும், பென்ஷன் பேமென்ட் ஆர்டரை மாற்றிக்கொள்ளாமலே, புதிய வங்கியிலும் எந்த இடையூறுமின்றி பென்ஷன் தொகை பெற வழிவகை செய்யப்பட்டுள்ளது.