/
செய்திகள்
/
வர்த்தகம்
/
வங்கி மற்றும் நிதி
/
கார்டு பயன்பாட்டில் புதிய நெறிமுறைகள்
/
கார்டு பயன்பாட்டில் புதிய நெறிமுறைகள்
ADDED : மார் 11, 2024 12:45 AM

கிரெடிட் கார்டில் அனுமதிக்கப்பட்ட கடன் வரம்பை விட, கூடுதலான பயன்பாடு தொடர்பாக ரிசர்வ் வங்கி புதிய நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது.
கார்டு பயன்பாட்டில், கடன் வரம்பை மீறி கூடுதலாக தொகையை பயன்படுத்த அனுமதிக்க, பயனாளிகளின் சம்மதம் தேவை என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. கார்டு பயன்பாட்டில் முறைகேட்டை தவிர்க்க, இந்த நெறிமுறை கொண்டு வரப்பட்டுள்ளது.
மேலும், கடன் வரம்பை கடந்து தொகையை பயன்படுத்தும் அம்சத்தை செயலிழக்கச் செய்ய அல்லது செயலாக்கம் செய்வதற்கான வசதி வாடிக்கையாளர்களுக்கு அளிக்கப்பட வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, கார்டு நிறுவனங்கள் வாடிக்கையாளர் அனுமதி இல்லாமல், கடன் வரம்பிற்கு மேல் பயன்பாட்டை அனுமதிக்க முடியாது மற்றும் அதற்கான அபராதம் விதிக்க முடியாது.
அதே போல, புதிய கார்டு வினியோகிக்க பயனாளிகள் அனுமதி தேவை. எனினும், கார்டு கோரப்படாமலே புதிய கார்டு வழங்கப்பட்டால், வாடிக்கையாளர் அதை செயல்படுத்தாமல் வைத்திருந்தால் ஒரு வாரத்திற்குள் திரும்ப பெறப்பட வேண்டும். இதே போல, கார்டு வினியோக நிறுவனங்களை தேர்வு செய்து கொள்ளும் வசதியையும் வழங்க வேண்டும் என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

