/
செய்திகள்
/
வர்த்தகம்
/
வங்கி மற்றும் நிதி
/
'பி.எப்., கணக்கு துவக்கம் புதிய உச்சம் தொட்டது'
/
'பி.எப்., கணக்கு துவக்கம் புதிய உச்சம் தொட்டது'
ADDED : செப் 08, 2025 10:52 PM

மும்பை : நாட்டின் முறைசாரா தொழிலாளர்கள், முறைசார் தொழிலாளர்களாக மாறி வருவதால், பி.எப்., திட்டத்தில் இணைவோர் எண்ணிக்கை, கடந்த நிதியாண்டில் புதிய உச்சத்தை தொட்டுள்ளது என, குவெஸ் கார்ப் வெளி யிட்ட ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் விபரம்:
கடந்த 2024-25ம் நிதியாண்டில், 1.40 கோடி தொழிலாளர்கள், உறுப்பினர்களாக இணைந்துள்ளனர். 2019ம் நிதியாண்டில் 61 லட்சம் பேர் இணைந்ததோடு, ஒப்பிடுகையில் இரண்டு மடங்கு அதிகமாகும்.
பி.எப்.,திட்டத்தில் புதிதாக உறுப்பினராக இணைந்தவர்களில், 61 சதவீதம் பேர் 29 வயதுக்கு உட்பட்டவர்கள். பாதிக்கும் மேற்பட்டோர் 18 முதல் 25 வயதுக்கு உட்பட்டோர் ஆவர்.