/
செய்திகள்
/
வர்த்தகம்
/
வங்கி மற்றும் நிதி
/
நிதி நிறுவனங்களில் டிபாசிட்: ஆர்.பி.ஐ., கட்டுப்பாடுகள் அமல்
/
நிதி நிறுவனங்களில் டிபாசிட்: ஆர்.பி.ஐ., கட்டுப்பாடுகள் அமல்
நிதி நிறுவனங்களில் டிபாசிட்: ஆர்.பி.ஐ., கட்டுப்பாடுகள் அமல்
நிதி நிறுவனங்களில் டிபாசிட்: ஆர்.பி.ஐ., கட்டுப்பாடுகள் அமல்
ADDED : ஜன 01, 2025 07:20 AM

புதுடில்லி: வங்கி சாரா நிதி நிறுவனங்களின் பிக்சட் டிபாசிட் கணக்குகளில், டிபாசிட் செய்யவும், பணம் எடுக்கவும் இன்று முதல் புதிய விதிகள் அமலுக்கு வருகின்றன. அவை வருமாறு:
நாமினி:
நாமினேஷன் குறித்த ழுமு விபரங்களையும் பெற்ற பிறகு, வாடிக்கையாளருக்கு அது தொடர்பாக சான்றளிப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. குறிப்பிட்ட நபரது பாஸ் புக்கிலும் நாமினேஷன் தகவல்களை பதிவிட்டு, நாமினேஷன் ரெஜிஸ்டர்டு என குறிப்பிட வேண்டும்.
முன்கூட்டி திரும்ப பெறுதல்:
10,000 ரூபாய் வரையிலான சிறிய டிபாசிட்களை, டிபாசிட் செய்து மூன்று மாதங்களுக்குள்ளாகவே முழுதுமாக திரும்ப பெற்றுக் கொள்ளலாம். ஆனால், இதற்கு வட்டி வழங்கப்படாது. பொது டிபாசிட்களை பொறுத்தவரை மொத்த டிபாசிட்களில் 50 சதவீதம் அல்லது 5 லட்சம் ரூபாய், இதில் எது குறைந்ததோ அதனை மூன்று மாதங்களுக்கு முன்னதாக பெற்றுக் கொள்ளலாம். திரும்ப பெற்ற தொகைக்கு வட்டி வழங்கப்படாது.
அவசர கால தேவை:
தீவிர உடல்நலக்குறைவு உள்ளிட்ட அவசர கால தேவைகளுக்கு, முழு டிபாசிட்டையும் மூன்று மாதங்களுக்கு முன்னதாகவே பெற்றுக் கொள்ளலாம். முன்கூட்டியே திரும்பப் பெறும் வசதி அல்லாத டிபாசிட் திட்டங்களிலும் இந்த வசதி வழங்கப்படும். இதற்கும் வட்டி வழங்கப்படாது. இவை அனைத்துமே தனி நபர் வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே பொறுந்தும்.
முதிர்ச்சி:
டிபாசிட்கள் முதிர்ச்சி அடைவதற்கு இரண்டு மாதங்களுக்கு முன்னதாகவே வாடிக்கையாளர்களுக்கு நினைவூட்ட வேண்டும் என்ற விதிமுறை இருந்தது. இது தற்போது 14 நாட்களுக்கு முன் நினைவூட்டினால் போதும் என, குறைக்கப்பட்டுள்ளது.

