/
செய்திகள்
/
வர்த்தகம்
/
வங்கி மற்றும் நிதி
/
'பின்டெக் நிறுவனங்களுக்கு ஆர்.பி.ஐ., எதிரானதல்ல'
/
'பின்டெக் நிறுவனங்களுக்கு ஆர்.பி.ஐ., எதிரானதல்ல'
ADDED : மார் 07, 2024 01:48 AM

புதுடில்லி: பேடிஎம் வங்கிக்கு தடைவிதித்ததை அடுத்து ரிசர்வ் வங்கி நிதி தொழில்நுட்ப நிறுவனங்களிடம் கடுமை காட்டுவதாக கருத்துகள் வெளியாகி உள்ளன. இதை அடுத்து இவ்விவகாரம் குறித்து சக்திகாந்த தாஸ் கூறியிருப்பதாவது:
ரிசர்வ் வங்கி, எந்த ஒரு நிதி தொழில்நுட்ப நிறுவனத்துக்கும் எதிரானது கிடையாது. இந்நிறுவனங்கள் வளர்ச்சியடைவதையே விரும்புகிறது.
பேடிஎம் வங்கி விவகாரத்தை பொறுத்தவரை, ரிசர்வ் வங்கியால் ஒழுங்குபடுத்தப்படும் ஒரு நிறுவனத்தின் மீதான நடவடிக்கை தானே தவிர, பின்டெக் நிறுவனங்களுக்கு எதிரான நடவடிக்கை அல்ல.
பேடிஎம் வங்கியை மட்டுமே சார்ந்திருந்த 15 முதல் 20 சதவீத வாடிக்கையாளர்கள், மற்ற வங்கிகளுக்கு மாறி வருகின்றனர்.
நிதித்துறையில் இடையூறுகள் ஏற்படாமல் இருக்கவே, ரிசர்வ் வங்கி கண்காணிப்பை தீவிரப்படுத்தியுள்ளது. நாட்டின் பின்டெக் துறை வளர்ச்சியை குறைக்க ரிசர்வ் வங்கி விரும்பவில்லை. இத்துறை, நிலையான வகையில் வேகமாக வளர்ச்சியடைவதை உறுதி செய்வதிலேயே நாங்கள் கவனம் செலுத்தி வருகிறோம்.
இவ்வாறு கூறி உள்ளார்.

