/
செய்திகள்
/
வர்த்தகம்
/
வங்கி மற்றும் நிதி
/
வட்டியை குறைத்தது ரிசர்வ் வங்கி : வீடு, வாகன கடன் இ.எம்.ஐ., பாரமும் குறைகிறது

ADDED : டிச 06, 2025 02:03 AM

மும்பை: மும்பையில் நடைபெற்ற ரிசர்வ் வங்கியின் பணக்கொள்கை குழு கூட்டத்தில், வங்கிகளுக்கு வழங்கப்படும் குறுகியகால கடன்களுக்கான ரெப்போ வட்டி விகிதத்தை 5.50 சதவீதத்திலிருந்து 0.25 சதவீதம் குறைத்து, 5.25 ஆக குறைக்கப்பட்டு உள்ளது.
இதனால், வீடு, வாகனம், தனிநபர் கடன்களுக்கான வட்டி விகிதம் குறைய வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. அவ்வாறு குறைக்கப்படும்பட்சத்தில், கடன் வாங்கியுள்ளவர்கள் செலுத்த வேண்டிய இ.எம்.ஐ., தொகையும் குறையும்.
முக்கிய முடிவுகள்
* ரெப்போ வட்டி விகிதம் 0.25 சதவீதம் குறைக்கப்பட்டு 5.25 சதவீதம் ஆனது
* நடப்பாண்டில் மட்டும் ரெப்போ வட்டி 1.25 சதவீதம் குறைப்பு
* நடப்பு நிதியாண்டுக்கான பொருளாதார வளர்ச்சி கணிப்பு 6.80 சதவீதத்தில் இருந்து 7.30 சதவீதமாக உயர்வு
* பணவீக்க கணிப்பு 2.60 சதவீதத்திலிருந்து 2 சதவீதமாக குறைப்பு
* வங்கிகளிடமிருந்து ஒரு லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான அரசு கடன் பத்திரங்களை வாங்க முடிவு
* கடந்த நவம்பர் 28ம் தேதி நிலவரப்படி அன்னிய செலாவணி கையிருப்பு 61.76 லட்சம் கோடி ரூபாய்
* அடுத்த பணக் கொள்கை குழு கூட்டம் அடுத்தாண்டு பிப்ரவரி மாதம் 4 - 6ம் தேதி வரை நடைபெறும்.