
இண்டஸ் இண்ட் 9.5% பங்கு வாங்க ஹெச்.டி.எப்.சி.,க்கு அனுமதி
ஹெச்.டி.எப்.சி., வங்கியின் குழும நிறுவனங்கள், இண்டஸ் இந்த் வங்கியின் 9.50 சதவீத பங்குகள் வரை வாங்கி வைத்துக் கொள்ளலாம் என்று ரிசர்வ் வங்கி டிச.15 தேதியிட்ட கடிதத்தில் அனுமதி அளித்துள்ளது. இந்த ஒப்புதல், 2026 டிச.14வரை செல்லுபடியாகும் என கூறப்பட்டுள்ளது.
அதேநேரத்தில், இண்டஸ் இந்த் வங்கியின் செலுத்தப்பட்ட மூலதனத்தில் அல்லது வாக்களிக்கும் உரிமையில் 9.5 சதவீதத்தை ஹெச்.டி.எப்.சி., வங்கி தாண்டுவதற்கு அனுமதி இல்லை.
இதற்கு முன்பு இண்டஸ் இந்த் வங்கியில் ஹெச்.டி.எப்.சி.க்கு சொந்தமான நிறுவனங்கள் அதிகபட்சம் 5 சதவீதம் முதலீடு செய்யலாம் என்ற அனுமதி இருந்தது. முதலீட்டு வரம்பை உயர்த்த விண்ணப்பிதத்தை அடுத்து ரிசர்வ் வங்கி, இந்த அனுமதியை அளித்துள்ளது.
வேதாந்தாவிலிருந்து பிரியும் துணை நிறுவனங்கள்
வேதாந்தா குழுமத்திலிருந்து வேதாந்தா அலுமினியம், வேதாந்தா ஆயில் அண்டு கேஸ், வேதாந்தா பவர், வேதாந்தா ஸ்டீல் அண்டு பெரஸ் மெட்டீரியல் ஆகிய நிறுவனங்கள் பிரிந்து தனித்தனி நிறுவனங்கள் ஆகின்றன. வேதாந்தா பேஸ் மெட்டல் நிறுவனம், தனது தாய் நிறுவனத்திலேயே தொடரும்.
இதற்கான உத்தரவை தேசிய நிறுவன சட்ட தீர்ப்பாயத்தின் மும்பை அமர்வு டிச.16 அன்று பிறப்பித்துள்ளது. இதனையடுத்து வேதாந்தா பங்குகளின் விலை, நேற்று 4 சதவீதம் அதிகரித்தது.

