
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோரப்படாத வைப்புத்தொகைகளின் அளவை குறைக்க,வங்கிகள் அவ்வப்போது சிறப்பு முகாம்களை நடத்த வேண்டும் என, ரிசர்வ் வங்கி கேட்டுக்கொண்டுள்ளது. வரும் ஏப்ரல் மாதம் 1ம் தேதி தேதி முதல், இது நடைமுறைபடுத்தப்படும் என்றும் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக, இனி இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக நுகர்வோரால் பரிவர்த்தனை மேற்கொள்ளப்படாமல் இருக்கும் சேமிப்பு அல்லது நடப்பு கணக்குகள், செயல்படாத கணக்குகளாக கருதப்படும். வைப்புத்தொகையில் உள்ள பணம் பத்தாண்டுகள் அல்லது அதற்கும் மேலாக கோரப்படாமல் இருந்தால் அது 'டி.இ.ஏ., பண்டு' திட்டம் 2014க்கு மாற்றப்பட வேண்டும்.