/
செய்திகள்
/
வர்த்தகம்
/
வங்கி மற்றும் நிதி
/
தெற்கு ரயில்வே உடன் யூனியன் பேங்க் ஒப்பந்தம்
/
தெற்கு ரயில்வே உடன் யூனியன் பேங்க் ஒப்பந்தம்
ADDED : நவ 14, 2025 12:19 AM

தெற்கு ரயில்வே உடன் யூனியன் பேங்க் ஒப்பந்தம்
தெ ற்கு ரயில்வே ஊழியர்களுக்கு, பல்வேறு சலுகைகளுடன் கூடிய சிறப்பு சம்பள கணக்கு துவங்க, யூனியன் பேங்க் ஆப் இந்தியாவும், தெற்கு ரயில்வேயும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன.
இதன் வாயிலாக, தெற்கு ரயில்வேயின் சென்னை, மதுரை, பாலக்காடு, சேலம், திருவனந்தபுரம், திருச்சி மண்டலங்களில் உள்ள ஒரு லட்சம் ரயில்வே ஊழியர்கள் பல்வேறு சலுகைகளை பெறுவர்.
யூனியன் பேங்க் ஆப் இந்தியாவின் சம்பளக்கணக்கில், 1.15 கோடி ரூபாய் வரை விபத்து காப்பீடு, 2 கோடி ரூபாய் வரை விமான விபத்து காப்பீடு, 10 லட்ச ரூபாய்க்கு ஆயுள் காப்பீடு, 1 கோடி ரூபாய் வரை உடல் ஊனத்துக்கான பாதுகாப்பு, பல்வேறு கடன் திட்டங்களில் வட்டிச் சலுகை, செயலாக்க கட்டணச் சலுகை போன்றவை கிடைக்கும்.

