/
செய்திகள்
/
வர்த்தகம்
/
வங்கி மற்றும் நிதி
/
ஆன்லைன் காப்பீடு வசதிக்கு வரவேற்பு
/
ஆன்லைன் காப்பீடு வசதிக்கு வரவேற்பு
ADDED : நவ 25, 2024 12:35 AM

இந்தியாவின் சிறிய நகரங்கள் மற்றும் கிராமப்புற பகுதிகளின் ஆன்லைன் மூலம் வாகன காப்பீடு பெறுவது அதிகரித்துள்ளதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது.
கடந்த மூன்று ஆண்டுகளில் மெட்ரோ நகரங்களில் ஆன்லைன் மூலம் வாகன காப்பீடு பெறுவது 35 சதவீத வளர்ச்சி கண்டுள்ள நிலையில், இரண்டாம் அடுக்கு சிறிய நகரங்களில் 70 சதவீத வளர்ச்சி ஏற்பட்டுள்ளதாக, இணைய காப்பீடு சேவை நிறுவனமான பாலிசிபஜார் தரவுகள் மூலம் தெரிய வந்துள்ளன.
கிராமப்புறங்களில் இந்த வளர்ச்சி 110 சதவீதமாக உள்ளது. இளம் வயதினர் மத்தியில் ஆன்லைன் வாகன காப்பீடு பிரபலமாக இருப்பதோடு, 40 வயதுக்கு மேற்பட்ட பிரிவினர் மத்தியிலும் இந்த வசதி பரவலாகி வருகிறது.
டிஜிட்டல் சேவைகள் பற்றிய விழிப்புணர்வு, இணைய வசதியின் பரவலாக்கம் உள்ளிட்ட அம்சங்கள் இந்த வளர்ச்சிக்கு முக்கிய காரணமாக கருதப்படுகிறது. மேலும், மின் வாகனங்கள் வளர்ச்சியும் ஒரு முக்கிய காரணமாக அமைகிறது.
டிஜிட்டலுக்கு முன்னுரிமை அளிக்கும் காப்பீடு மேடைகளை அணுகும் வசதி அதிகரித்து வரும் நிலையில், சிறிய நகரங்கள், கிராமங்களில் ஆன்லைன் வாகன காப்பீடு வளர்ச்சி தொடரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.