ADDED : மே 15, 2024 12:34 AM

புதுடில்லி,:'கென்ட் ஆர்.ஓ., சிஸ்டம்ஸ்' நிறுவனத்தை சேர்ந்த, மின்விசிறிகள் தயாரிப்பில் ஈடுபட்டுள்ள 'கூல் ஸ்டைலிஷ் பேன்ஸ்' நிறுவனம், 'எக்ஸ்செல் எச்1' எனும் புதிய கூலர் பேன் ஒன்றை அறிமுகம் செய்துள்ளது.
'பெடஸ்டல் பேன்' வடிவிலிருக்கும் இந்த கூலரால், எட்டு மணி நேரத்துக்கு தடையின்றி குளிர்விக்க முடியும் எனவும், மின்சாரத்தை 65 சதவீதம் வரை சேமிக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் உள்ள எட்டு இறக்கைகள், அதிகப்படியான காற்றை வெளியிடுவதுடன், குறைந்த இறைச்சலிலும் இயங்குகிறது.
'அல்ட்ராசோனிக் மிஸ்ட் ஹியுமிடிபையர்' தொழில்நுட்பம், நீர் துளிகள் தெறிக்காத குளிர்ந்த சுழலை உருவாக்க உதவும்.
இது குறித்து கெண்ட் ஆர்.ஓ., சிஸ்டம்ஸ் நிறுவனத்தின் இணை மேலாண்மை இயக்குனர் வருண் குப்தா கூறியதாவது:
எக்ஸ்செல் எச்1 கூலர், வீட்டு அலாங்காரத்தை மேம்படுத்துவதுடன், அதிக ஆற்றல் திறனையும் உறுதி செய்கிறது. இதன் புதுமையான வடிவமைப்பு மற்றும் மேம்பட்ட அம்சங்கள், பாரம்பரிய கூலர்களில் இருந்து மாறுபட்டு, புதிதாக உள்ளது.
இவ்வாறு கூறினார்.

