ADDED : மே 09, 2024 02:00 AM

புதுடில்லி: தேர்தல் காரணமாக, வாகன விற்பனை மே மாதத்தில் பாதிக்கப்பட வாய்ப்பு உள்ளதாக, வாகன முகவர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
புதிய அரசு அமைக்கபோவது யார் என்ற குழுப்பம், வாடிக்கையாளர்கள் வாகனம் வாங்கும் முடிவை பாதிப்பதாகக் கூறப்படுகிறது. தேர்தலுக்குப் பின் அமையும் புதிய அரசு மாற்றக்கூடிய நிதி கொள்கைகள், மக்களின் வருவாயை பாதிக்கக்கூடிய வாய்ப்பு; தேர்தல் சமயத்தில் அதிகப்படியான பணம் எடுத்து செல்வதற்கான கட்டுப்பாடு ஆகியவை வாகனங்கள் வாங்குவதற்கு தடையாக இருக்கும் என கருதப்படுகிறது.
இருசக்கர வாகனங்கள், மூன்று சக்கர வாகனங்கள், பயணியர் வாகனங்கள் உள்ளிட்டவற்றின் விற்பனையை உள்ளடக்கிய வாகன சில்லரை விற்பனையானது, கடந்த ஏப்ரல் மாதம் 27 சதவீதம் அதிகரித்துள்ளது.
வழக்கமாக மார்ச்சில் துவங்கும் 'சைத்ரா' நவராத்திரி பண்டிகை, இந்த ஆண்டு ஏப்ரலில் துவங்கிய காரணத்தினால், வாகன விற்பனை கடந்த மாதம் அதிகரித்துள்ளது.
மேலும், நிலையான எரிபொருட்கள் விலை, சாதகமான பருவமழை எதிர்பார்ப்பு, திருமண காலம் போன்ற காரணங்களும், விற்பனை அதிகரிப்பதற்கு உதவியுள்ளது. தற்போது புதிய மாடல்களின் அறிமுகம் குறித்த விருப்பமும், வாடிக்கையாளர்களிடம் அதிகரித்துள்ள போதிலும், தேர்தலை சுற்றியுள்ள நிச்சயமற்ற தன்மையால், வாகன விற்பனை இம்மாதம் பாதிக்கப்படக்கூடும் என்று வாகன முகவர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
வாகன சில்லரை விற்பனை
பிரிவு விற்பனை(ஏப்., 2023 ஏப்., 2024) வளர்ச்சி