இந்தியாவில் சாட்காம் சேவை உரிமம் பெற்றது ஸ்டார்லிங்க்
இந்தியாவில் சாட்காம் சேவை உரிமம் பெற்றது ஸ்டார்லிங்க்
ADDED : ஆக 01, 2025 01:33 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுடில்லி:இந்தியாவில் 'சாட்காம்' எனும் செயற்கைக்கோள் வழி இணைய சேவை துவங்குவதற்கு எலான் மஸ்கின் ஸ்டார்லிங்க் நிறுவனத்துக்கு உரிமம் வழங்கப்பட்டு உள்ளதாக மத்திய அமைச்சர் ஜோதிர் ஆதித்ய சிந்தியா தெரிவித்து உள்ளார்.
மேலும் அவர் தெரிவித்ததாவது:
இந்தியாவில் செயற்கைக்கோள் வழி இணையச் சேவை துவங்குவதற்கு ஸ்டார்லிங்க் நிறுவனத்துக்கு ஒருங்கிணைந்த உரிமம் வழங்கப்பட்டு உள்ளது. அலைக்கற்றை ஒதுக்கீடு தொடர்பான விதிமுறைகள் அனைத்தும் தயார் நிலையில் உள்ளன.
ஸ்டார்லிங்க் நிறுவனத்துடன், பார்தி குழுமத்தின் ஈயுடெல்சாட் ஒன்வெப் மற்றும் ஜியோ நிறுவனத்தின் எஸ்.இ.எஸ்., நிறுவனங்களும் அலைக்கற்றை ஒதுக்கீடுக்காக காத்திருக்கின்றன.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.