ரூ.10,000 கோடி முதலீடு; 'பிரெஸ்டீஜ்' குழுமம் தகவல்
ரூ.10,000 கோடி முதலீடு; 'பிரெஸ்டீஜ்' குழுமம் தகவல்
ADDED : ஆக 21, 2024 12:54 AM

பெங்களூரு: நடப்பு நிதியாண்டில், அடுக்குமாடி குடியிருப்பு கட்டுமானத் திட்டங்களுக்கு, 10,000 கோடி ரூபாயை முதலீடு செய்ய இருப்பதாக, பெங்களூரைச் சேர்ந்த ரியல் எஸ்டேட் நிறுவனமான பிரெஸ்டீஜ் குழுமம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அந்நிறுவனத்தின் விற்பனைப் பிரிவு துணை தலைவர் பிரவீர் ஸ்ரீவத்சவா கூறியதாவது:
பெங்களூரு மட்டுமின்றி, டில்லி என்.சி.ஆர், கோவா, ஹைதராபாத், மும்பை, சென்னை உள்ளிட்ட தென்னிந்திய நகரங்களில் எங்கள் சேவையை விரிவுப்படுத்தஉள்ளோம்.
2024--25ம் நிதியாண்டு இறுதிக்குள், 10,000 கோடி ரூபாயை முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளோம்.
இதில், 3,000 கோடி ரூபாய் நிலங்கள் வாங்குவதற்கும், 7,000 கோடி ரூபாய் கட்டுமான மற்றும் வளர்ச்சி திட்டங்களுக்கும் ஒதுக்கீடு செய்துள்ளோம்.
மேலும், பெங்களூரில், 25 லட்சம் சதுரடி பரப்பளவில் கட்டப்பட்டுள்ள, 30,000 கோடி ரூபாய் மதிப்பிலான, அடுக்குமாடி குடியிருப்புகள் விற்பனையை விரைவில் துவங்க உள்ளோம்.
சென்னையில் ஏற்கனவே, 5,000 கோடி ரூபாய் மதிப்பிலான இரண்டு நிலங்களை கையகப்படுத்தி உள்ளோம். இதில், 1 கோடி ரூபாய்க்கும் அதிகமான மதிப்பு கொண்ட, நடுத்தர அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட உள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.
சென்னையில் ஏற்கனவே, 5,000 கோடி ரூபாய் மதிப்பிலான இரண்டு நிலங்களை கையகப்படுத்தி உள்ளோம். இதில், ரூ.1 கோடிக்கும் அதிகமான மதிப்பு கொண்ட, நடுத்தர அடுக்குமாடி குடியிருப்புகளை கட்டப்பட உள்ளன.

