ADDED : மே 09, 2024 02:23 AM

புதுடில்லி: நடப்பு தேர்தல் காலத்தில், மாநிலங்களுக்கு இடையே மக்கள் பயணிப்பது, 27 சதவீதம் அதிகரித்துள்ளது.
நடப்பாண்டு லோக் சபா தேர்தல் சமயத்தில், மக்கள் மேற்கொள்ளும் பயணங்களில், குறிப்பிடத்தக்க மாற்றங்களை உணர முடிந்ததாக, 'அபிபஸ்' மற்றும் 'இக்சிகோ' பயண தளங்கள் தெரிவித்துள்ளன.
இந்தியாவில் கலாசார சுற்றுலா, மருத்துவ சுற்றுலா, வனவிலங்கு சுற்றுலா என பலவகை சுற்றுலாக்கள் உள்ளன. இந்த வரிசையில், மக்கள் தங்கள் ஜனநாயக கடமையை ஆற்றுவதற்காக மேற்கொள்ளும் பயணம், தேர்தல் சுற்றுலா என்று அழைக்கப்படுகிறது.
அந்த வகையில், சமீபத்திய தேர்தலின்போது, மாநிலத்துக்கு உள்ளேயே மேற்கொள்ளப்பட்ட பயணம், தமிழகம், ஒடிசா, பீஹார், ராஜஸ்தான், உ.பி., ஆகிய மாநிலங்களில் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோல் மாநிலங்களுக்கு இடையேயான பயணமும், குறிப்பிடத்தக்க உயர்வைக் கண்டுள்ளது. அதன்படி, கர்நாடகாவில் இருந்து தமிழகத்துக்கு மேற்கொள்ளப்பட்ட பேருந்து பயணம், இக்காலகட்டத்தில் 21 சதவீதம் உயர்ந்துள்ளது.
பேருந்துகளில் பயணம்
மாநிலம் வளர்ச்சி
தமிழகம் 27% ஏற்றம்
ஒடிசா 10% ஏற்றம்
பீஹார் 16% ஏற்றம்
ராஜஸ்தான் 26% ஏற்றம்
உ.பி., 24% ஏற்றம்
ஆதாரம் அபிபஸ்