ADDED : மே 19, 2024 02:06 AM

புதுடில்லி:நடப்பாண்டின் முதல் காலாண்டில், இந்தியாவின் கணினி சந்தையில், 30.7 லட்சம் கணினி சாதனங்கள் விற்கப்பட்டுஉள்ளதாக, ஐ.டி.சி., எனும் சர்வதேச தரவு கார்ப்பரேஷன் நிறுவனம் தெரிவித்துஉள்ளது.
டெஸ்க்டாப், நோட்புக், வொர்க் ஸ்டேஷன் உள்ளிட்ட சாதனங்களை உள்ளடக்கிய இந்திய பெர்சனல் கம்ப்யூட்டர் சந்தையில், நடப்பு 2024ம் ஆண்டின் முதல் காலாண்டில், 30.70 லட்சம் சாதனங்கள் வினியோகிக்கப்பட்டு உள்ளன.
இது முந்தைய ஆண்டை விட, 2.60 சதவீத வளர்ச்சி ஆகும். டெஸ்க்டாப் மற்றும் வொர்க் ஸ்டேஷன் முறையே, 10.10 மற்றும் 2.70 சதவீத வளர்ச்சியை பதிவு செய்துள்ளன. ஆனால், நோட்புக்குகள் 1.70 சதவீதம் சரிவை கண்டுள்ளது.
நுகர்வோர் பிரிவில் 4.40 சதவீதமும், வர்த்தக பிரிவில் 1.30 சதவீதமும் வளர்ச்சி பதிவாகி உள்ளது.
(சதவீதத்தில்)
நிறுவனம் நுகர்வோர் பிரிவு வர்த்தக பிரிவு மாற்றம்
டாப் 5 நிறுவனங்கள்
நிறுவனம் சந்தையில் பங்கு

