ADDED : மே 30, 2024 11:59 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுடில்லி:'ஹீரோ பின்கார்ப்' நிறுவனம் புதிய பங்கு வெளியீட்டுக்கு வருவதற்கு, அந்நிறுவனத்தின் இயக்குனர் குழு ஒப்புதல் அளித்துள்ளது.
'ஹீரோ மோட்டோகார்ப்' நிறுவனத்தின் துணை நிறுவனமான ஹீரோ பின்கார்ப், தனிநபர், வீடு, காப்பீடு மற்றும் வணிக கடன்களை வழங்கும் ஒரு வங்கி சாரா நிதி நிறுவனமாகும். இந்நிறுவனம், புதிய பங்கு வெளியீடு வாயிலாக, 4,000 கோடி ரூபாய் நிதி திரட்ட திட்டமிட்டுள்ளது. இதற்கு, இந்நிறுவனத்தின் இயக்குனர் குழு தற்போது ஒப்புதல் அளித்துள்ளது.
இந்த பங்கு வெளியீட்டில், புதிய பங்குகள் மற்றும் பங்குதாரர் பங்குகள் இரண்டும் அடங்கும் எனவும், இந்த நிதி திரட்டல் மேலும் சில ஒழுங்குமுறை ஒப்புதலுக்கு உட்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.