ADDED : மார் 05, 2025 11:40 PM

சென்னை:ரிலையன்ஸ் குழுமத்தின் ரிலையன்ஸ் ரீடெய்ல் நிறுவனத்தைச் சேர்ந்த ஸ்மார்ட் பஜார், பெண்கள் தினத்தை முன்னிட்டு, ஐந்து நாட்கள் கொண்டாட்டத்தை அறிவித்துள்ளது.
இதுகுறித்து தெரிவித்திருப்பதாவது:
நேற்று துவங்கி, ஒன்பதாம் தேதி வரை, பெண்கள் தினத்தை முன்னிட்டு, நாடு முழுதும் 900க்கு மேற்பட்ட ஸ்மார்ட் பஜார்களில் தினசரி நிகழ்ச்சிகள், பிரபலங்கள் வருகை, அதிரடி தள்ளுபடி என, அம்சங்கள் இடம்பெற்றுள்ளன.
இதுவரை இல்லாத கொண்டாட்டமாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில், இடம்பெறும் மாஸ்டர்கிளாஸ் நிகழ்ச்சியில் மகளிர் பங்கேற்று, புதிதாக எதையாவது அறியும் வாய்ப்பு வழங்கப்படுகிறது. வேடிக்கை நிகழ்ச்சிகளில் நண்பர்களுடன் விளையாடி மகிழலாம். குறிப்பிட்ட சில ஸ்மார்ட் பஜார்களில் ஆர்.ஜே.க்கள், பிரபலங்களை சந்தித்து பேசலாம்.
மகளிர் ஆடைகள் இரண்டு வாங்கினால் ஒன்று இலவசம், கிளோவியா, ஜிவாமி ஆகிய பிராண்டட் உடைகள் ஒன்று வாங்கினால் இரண்டு இலவசம் ஆகிய சலுகைகள் கிடைக்கின்றன. அழகு சாதனப் பொருட்களும் ஒன்று வாங்கினால் ஒன்று இலவசம் என்ற சலுகை வழங்கப்படுகிறது.
சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு, ஸ்மார்ட் பஜாரின் இந்த ஐந்து நாள் கொண்டாட்டத்தில் இணைந்து, ஷாப்பிங், பொழுதுபோக்கு, சேமிப்பு ஆகியவற்றை பெறலாம்.
இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.