செமிகண்டக்டர் துறையில் ஒத்துழைப்பு: சிங்கப்பூருடன் புரிந்துணர்வு ஒப்பந்தம்
செமிகண்டக்டர் துறையில் ஒத்துழைப்பு: சிங்கப்பூருடன் புரிந்துணர்வு ஒப்பந்தம்
ADDED : செப் 06, 2024 02:46 AM

புதுடில்லி:மின்னணு துறையில் மிக முக்கிய தேவையான, செமிகண்டக்டர் தயாரிப்பில் இணைந்து பணியாற்ற இந்தியாவும், சிங்கப்பூரும் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன.
இதுகுறித்து சிங்கப்பூர் அரசு தெரிவித்ததாவது:
இந்தியா, சிங்கப்பூர் இடையே செமிகண்டக்டர் துறையில் கூட்டணி மற்றும் ஒத்துழைப்பிற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம், இந்திய பிரதமர் மோடி, சிங்கப்பூர் பிரதமர் லாரன்ஸ் வாங் ஆகியோர் முன்னிலையில் கையெழுத்தாகியுள்ளது.
விரைவாக வளரும் இந்திய சந்தையில், செமிகண்டக்டர் வினியோக தொடர் குறித்த ஒத்துழைப்பை சிங்கப்பூர் வழங்க இந்த ஒப்பந்தம் வகை செய்கிறது.
இந்தியாவில் அதிகரித்து வரும் செமிகண்டக்டர் சந்தைக்கு, சிங்கப்பூர் செமிகண்டக்டர் துறை சார்பில் ஆதரவை வழங்கவும் ஒப்பந்தம் வழி செய்கிறது.
இந்த ஒப்பந்தத்தில், இந்திய தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், சிங்கப்பூர் வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் கான் கிம் யாங் ஆகியோர், கடந்த 26ம் தேதி நடைபெற்ற இந்தியா, சிங்கப்பூர் அமைச்சர்கள் வட்டமேசை ஆலோசனையின்போது கையெழுத்திட்டனர்.
செமிகண்டக்டர் துறையில் இந்தியா, சிங்கப்பூர் இடையே கொள்கை விபர ஆலோசனை வாயிலாக, சிறந்த நடைமுறையில் செமிகண்டக்டர் பயன்பாடு உறுதிபடுத்தப்படும்.
செமிகண்டக்டர்கள் எங்கு தேவை?
மின்னணு பொருட்கள்
மின்சார வாகனங்கள்
உற்பத்தி சார்ந்த துறைகள்