ADDED : ஆக 06, 2024 07:35 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அதானி குழுமத்தின் தலைவர் கவுதம் அதானி, இளைய தலை முறைக்கு வழிவிடும் வகையில், வருகிற 2030ம் ஆண்டு, தன் 70 வயதில், நிர்வாக பொறுப்புகளை மகன்கள் மற்றும் உறவினர்களிடம் ஒப்படைக்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
அதானியின் மூத்த மகன் தற்போது 'அதானி போர்ட்ஸ்' நிர்வாக இயக்குனராகவும், இளைய மகன் ஜீத், 'அதானி விமான நிலையங்கள்' இயக்குனராகவும் உள்ளனர். மேலும், அவரது மருமகன் பிரணவ், 'அதானி எண்டர்பிரைசஸ்' இயக்குனராகவும், மற்றொரு மருமகன் சாகர், அதானி 'கிரீன் எனர்ஜி'யின் நிர்வாக இயக்குனராகவும் இருந்து வருகின்றனர்.