ADDED : மே 28, 2024 06:49 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுடில்லி : மின் வினியோகத்தில் ஈடுபட்டு வரும், 'அதானி எனர்ஜி சொல்யூஷன்ஸ்' நிறுவனம், கிட்டத்தட்ட 12,500 கோடி ரூபாய் நிதி திரட்ட, அதன் இயக்குனர் குழு ஒப்புதல் அளித்துள்ளதாக தெரிவித்துள்ளது. பங்குகள் மற்றும் கடன் பத்திரங்களை வெளியிட்டு நிதி திரட்டவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும் நிதி திரட்டுவதற்கான நோக்கமும், எந்த விலையில் பங்குகள் வெளியிடப்படும் என்பது குறித்தும் எந்த தகவலும் தெரிவிக்கப்படவில்லை.
ஏற்கனவே 'அதானி என்டர்பிரைசஸ்' நிறுவனமும் தொடர் பங்கு வெளியீட்டின் வாயிலாக நிதி திரட்ட திட்டமிட்டு உள்ளது.
இந்நிலையில், நாளை நடைபெறவுள்ள அந்நிறுவனத்தின் இயக்குனர் குழு கூட்டத்தில், இதுதொடர்பாக ஆலோசிக்கப்பட்டு ஒப்புதல் வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.