ADDED : ஜூன் 21, 2024 11:36 PM

புதுடில்லி:'அதானி போர்ட்ஸ்' நிறுவனத்தின் பங்குகள், நாளை மறுதினம் முதல், மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் குறியீட்டில் வர்த்தகமாக உள்ளன.
இந்தியாவின் மிகப்பெரிய தனியார் துறைமுக நிறுவனமான அதானி போர்ட்ஸ் பங்கு விலை, இந்த வாரம் 6 சதவீதம் அளவுக்கு உயர்ந்தது. இதையடுத்து, மும்பை பங்குச் சந்தையின் டாப் 30 நிறுவனங்களை உள்ளடக்கிய சென்செக்ஸ் குறியீட்டில், இந்நிறுவனம் தற்போது இணைய உள்ளது.
இதன்படி, நாளை மறுதினம் முதல், அதானி போர்ட்ஸ் பங்குகள், 'பி.எஸ்.இ., சென்செக்ஸ்' குறியீட்டில் வர்த்தகமாக உள்ளன. இதன் காரணமாக, 2,150 கோடி ரூபாய் முதலீடுகளை இந்நிறுவனம் ஈர்க்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
'ஹிண்டன்பர்க்' குற்றச்சாட்டுக்கு பின், அதானி குழும பங்குகள் விலை, பெரும் சரிவை கண்டன. தற்போது அந்த பாதிப்பிலிருந்து குழுமம் மீண்டு வரும் நிலையில், முற்றிலும் மீட்சி கண்ட முதல் நிறுவனமாகி இருக்கிறது, அதானி போர்ட்ஸ்.