ADDED : மே 25, 2024 08:51 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருவனந்தபுரம்:கேரளாவில், 225 மெகாவாட் உற்பத்தி திறன் கொண்ட சோலார் மின் நிலையத்தை அமைக்க உள்ளதாக, 'அதானி சோலார்' நிறுவனம் தெரிவித்துள்ளது-.
கேரளாவின் புரப்புராவில், 225 மெகாவாட் உற்பத்தி திறன் கொண்ட, சோலார் மின் உற்பத்தி மையத்தை, ஓராண்டுக்குள் அமைக்க, அதானி சோலார் நிறுவனம் முடிவு செய்துள்ளது. இதற்காக கேரள மாநிலத்தின் கொச்சியை தலைமையிடமாகக் கொண்ட 'அல்மியா' குழுமத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திட்டு உள்ளது.
இந்த மின் உற்பத்தி மையத்திற்கு தேவையான பேனல்களை விரைந்து வழங்குவதற்கு ஏதுவாக, கேரளாவிலும், தமிழகத்தின் கோயம்புத்துாரிலும் சேமிப்பு கிடங்கை அமைக்க உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.